இது புடவையா? லுங்கியா? சோனாக்ஷி சின்ஹாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
பெங்களூரு: சென்னையில் நடைபெற்ற சல்மான் கானின் தபங் 3 புரொமோஷனுக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா வருகை தரவில்லை.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடைபெறவுள்ள படத்தின் புரொமோஷனுக்கு சோனாக்ஷி சின்ஹா செக்ஸியாக சேலைக்கட்டி ரெடியாகி விட்டார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
புரொமோஷனுக்கு ரெடியாகிட்டேனே
சேலையைக் கூட எப்படி செக்ஸியாக கட்டுவது என்பதை சோனாக்ஷி சின்ஹாவை பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். தபங் முதல் பாகத்தில் இருந்தே சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வரும் சோனாக்ஷி மூன்றாவது பாகத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இது லுங்கி சோனாக்ஷி
சோனாக்ஷியின் கட்டம் போட்ட சேலையை பார்த்த ரசிகர்கள், அவரது லுக் குறித்து மிகவும் ஹாட்டாகவும் ஸ்பைசியாகவும் இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வரும் வேளையில், சில நக்கல் புடித்த நெட்டிசன்கள், இது சேலை அல்ல லுங்கி சோனாக்ஷி என கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்.
லுங்கி கூட இல்ல பெட்சீட்
சோனாக்ஷியின் சேலை லுங்கி போன்று இருப்பதாக சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், இன்னும் சில ரசிகர்கள், இது லுங்கி இல்ல பெட்சீட் என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
டாவின்சி இப்போ இருந்திருந்தா
லியோனார்டோ டாவின்சி இப்போ இருந்திருந்தா மோனா லிசா ஓவியத்துக்கு பதிலாக சோனாக்ஷி சின்ஹா ஓவியத்தை வரைந்திருப்பார் என இந்த தீவிர ரசிகர் சோனாக்ஷிக்கு மிகப்பெரிய ஐஸ் வைத்துள்ளார்.
பாய்காட் தபங் 3
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராடி வரும் நிலையில், சினிமா புரொமோஷனுக்காக அலைந்து வரும் சல்மான் கான் மற்றும் சோனாக்ஷியை பாலிவுட் ரசிகர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர். மேலும், தபங் 3 படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் பலர் ட்வீட் செய்து வருகின்றனர். இதனால், தபங் 3 படத்தின் வசூல் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.


Click it and Unblock the Notifications











