அமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷிக்கு என்ன வந்துச்சு தெரியுமா?
Recommended Video

மும்பை: ரூ. 18 ஆயிரத்திற்கு ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அமேசான் இணையதளத்தில் ரூ. 18 ஆயிரத்திற்கு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த ஹெட்போன் டெலிவரி ஆனதும் அதை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி.
காரணம் ஹெட்போனுக்கு பதில் துருபிடித்த இரும்புத் துண்டுகள் இருந்துள்ளது.
சோனாக்ஷி
போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த எனக்கு என்ன வந்துள்ளது என்று பாருங்கள் அமேசான் இந்தியா. அழகாக பேக் செய்யப்பட்டு, உண்மையானது போன்று இருந்தது ஆனால் வெளியே மட்டும் தான். உங்களின் கஸ்டமர் சர்வீஸ் உதவி செய்ய தயாராக இல்லை. இது ரொம்ப மோசம் என்று சோனாக்ஷி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரூ. 18,000
யாருக்காவது ரூ.18 ஆயிரத்திற்கு பளபளக்கும் குப்பை வேண்டுமா? என்று கேட்டு நக்கல் செய்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
ஆன்லைன்
அமேசானில் பொருள் ஆர்டர் செய்து ஏமாந்த ஒருத்தர் சோனாக்ஷியின் ட்வீட்டை பார்த்துவிட்டு இப்படி தெரிவித்துள்ளார்.
நகுல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகர் நகுல் ஃப்ளிப்கார்டில் ரூ. 1.25 லட்சத்திற்கு ஐபோன் ஆர்டர் செய்ய போலி அளிக்கப்பட்டது. அவர் புகார் தெரிவித்த பிறகு போனை திரும்பி வாங்கிக் கொண்டு பணத்தை வாபஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[போலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்]


Click it and Unblock the Notifications











