ரஜினி வழியைப் பாலோ செய்யும் சோனாக்ஷி சின்ஹா...
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா தற்போது அதிகளவில் ஆன்மீகப் புத்தகங்களைப் படித்து வருகிறாராம். இதற்குக் காரணம் ரஜினி தானாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, மற்றொரு நடிகை அனுஷ்கா.
தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் லிங்காவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ரஜினியுடன் சோனாக்ஷியும் நடித்துள்ளார். ஆனால் அப்போது அவரை ஒரு மட்டமான ஹோட்டலில் தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆதங்கம்...
இதனால் சோனாக்ஷி அப்சட் ஆகிவிட்டாராம். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சோனாக்ஷி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விளக்கம்...
இந்தத் தகவல் ரஜினிக்கும், படக்குழுவினருக்கும் தெரிய வர அவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். ஷிமோகாவில் பெரிய அளவில் ஹோட்டல் வசதிகள் இல்லை. அதனால் அங்கு இருந்த ஹோட்டல்களில் நல்ல ஹோட்டலாக பார்த்துதான் சோனாக்ஷியை தங்க வைத்ததாக விளக்கமளித்துள்ளனர்.

தவறான தகவல்...
பின்னர், நிமையைப் புரிந்து கொண்ட சோனாக்ஷி தனது டுவிட்டர் பக்கத் தகவலை அழித்து விட்டாராம்.

ஆன்மீக நாட்டம்...
இதற்கிடையே ரஜினியுடன் நடித்த நாட்களில் அவரது ஆன்மீகப் பற்றால் சோனாக்ஷி மிகவும் கவரப்பட்டு விட்டாராம். அதனால், ரஜினி அறிவுரைப் படி தற்போது ஆன்மீகப் புத்தகங்களை அதிகளவில் விரும்பிப் படிக்கத் தொடங்கியுள்ளாராம் சோனாக்ஷியும்.


Click it and Unblock the Notifications











