லிங்கா ஆடியோ ரிலீஸ் விழாவில் ‘தங்க தேவதை’யாக ஜொலித்த சோனாக்ஷி...
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற ரஜினியின் லிங்கா பட ஆடியோ ரிலீசிற்கு தங்க நிறத்தில் தகதகவென்ற உடையணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை சோனாக்ஷி சின்கா.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘லிங்கா'. இப்படத்தில் இவருக்கு அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி என இரண்டு நாயகிகள். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று சென்னையில் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

லிங்கா ஆடியோ ரிலீஸ்...
இந்த விழாவில் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், அனுஷ்கா, சோனாக்ஷி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மீண்டும் லிங்கா டீம்...
இதற்கென மும்பையிலிருந்து சென்னை வந்திருந்தார் சோனாக்ஷி. முன்னதாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மீண்டும் ரஜினி சார் உட்பட லிங்கா டீமைச் சந்திக்கப் போகிறேன்.

ஆஸ்கர் நாயகன்...
ஆனால், முதன்முறையாக இப்போது தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்திக்க உள்ளேன்' எனப் பதிவு செய்துள்ளார்.

தங்கத் தாமரை...
இந்த விழாவிற்கு மனிஷ் மல்கோத்ரா தயார் செய்து கொடுத்த தங்க நிற சேலையை அணிந்து வந்திருந்தார் சோனாக்ஷி. வழக்கம் போல் இந்த உடையில் மனிஷ் தன்னை பளபளப்பாக ஜொலிக்க வைத்துள்ளதாக சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











