லாக்டவுன் நேரத்தில் ஷூட்டிங்? ஹீரோயினை சாடிய பிரபல இயக்குனர்... போட்டுத் தாக்கிய ரஜினி பட நடிகை!

By

மும்பை: லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக சொன்ன இயக்குனரை, சாடியுள்ளார் வாங்கியுள்ளார் பிரபல ஹீரோயின்.

Recommended Video

கோபமாக வீடியோ வெளியிட்ட ரஜினி ஹீரோயின்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருந்தும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் தாக்கம்

பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இப்போது ஒன்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது. இங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

பத்திரிகை போட்டோ

சினிமா படப்பிடிப்புகள், தியேட்டர்கள் மொத்தமாக முடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திப் பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இருந்து பிரபல நடிகை சோனாக்‌ஷி சின்ஹா வெளியே வருவது போன்ற பத்திரிகை போட்டோ ஒன்றை, டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், இந்த நேரத்தில் யார் ஷூட்டிங் நடத்துவார்கள்? என்று கேட்டிருந்தார்.

எங்க தெரியபோகுது?

எங்க தெரியபோகுது?

இதையடுத்து நெட்டிசன்கள், த்ரோபேக் விஷயங்கள்லாம் அந்த டைரக்டருக்கு எங்க தெரிய போகுது? என்று கிண்டலடித்துள்ளனர். இன்னும் சிலர் கடுமையாக விவேக் அக்னிஹோத்ரியை திட்டியுள்ளனர். பின்னர் அடுத்த ட்வீட்டில் மும்பை போலீஸ் மற்றும் மகாராஷ்ட்ர முதலமைச்சர் ஆகியோரை டேக் செய்து, 'இதுபோன்ற நேரத்தில் இப்படி வதந்திகளையும் தவறான செய்திகளையும் பரப்புபவர்களை தடுக்க என்ன வழிமுறை இருக்கிறது?

தவறான எண்ணம்

தவறான எண்ணம்

பொறுப்புள்ள குடிமகனைக் கேட்பது, வீட்டில் அமருங்கள், சமூக விலகலை கடைபிடியுங்கள' என்று கூறியுள்ளார். இதையடுத்து இயக்குனர் விவேக், 'நான் உங்களை குறை சொல்லவில்லை. அந்த பத்திரிகையைதான் சொன்னேன். உங்களை சொல்லியிருந்தால், உங்களுக்கு டேக் செய்திருப்பேன். இதுபோன்ற செய்திகளை இந்த நேரத்தில் பதிவு செய்யும் போது அந்த பத்திரிகை, சரியாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ரஜினிகாந்தின் லிங்கா

ரஜினிகாந்தின் லிங்கா

இல்லை என்றால் அது தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். விவேக் அக்னிஹோத்ரி, இந்தியில் சாக்கலேட், தன் தனா தன் கோல், ஹேட் ஸ்டோரி, புத்தா இன் டிராபிக் ஜாம் உட்பட சில படங்களை இயக்கியவர். நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, தமிழில் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X