மோடி ஊழலற்ற ஆட்சியை தருவார்.... நடிகை சோனாக்‌ஷி

மும்பை: இது மாற்றத்திற்கான நேரம், அதனால் ஊழலற்ற ஆட்சியை நரேந்திரமோடி தருவார் என பிரபல நடிகை சோனாக்‌ஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தி பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பிரபல இந்தி நடிகரும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்‌ஷி. லோக்சபா தேர்தலில் சத்ருகன் சின்கா பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தனது தந்தைக்காக தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள சோனாக்‌ஷி, ஆனால் தனது ஆதரவு மோடிக்குத் தான் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது :-

சவாலான பிரச்சினை...

சவாலான பிரச்சினை...

தற்போது நாட்டிற்கு சவாலான, பெரும் பிரச்சினையாக இருப்பது, லஞ்சமும், ஊழலும்தான். இதேபோல் பெட்ரோல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இவற்றிலிருந்து நாடு விடுபடவேண்டும். அதற்கான மாற்றம் நாடாளுமன்ற தேர்தலில் நடக்கும் என்று தெரிகிறது.

ஊழலற்ற ஆட்சியை மோடி தருவார்...

ஊழலற்ற ஆட்சியை மோடி தருவார்...

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நிச்சயம் நாட்டுக்கு நல்லது செய்வார் என்றும் ஊழலற்ற ஆட்சியை தருவார் எனவும் நம்புகிறேன்.

மாற்றத்தை விரும்புகிறோம்...

மாற்றத்தை விரும்புகிறோம்...

என்னை போன்றவர்கள் நாட்டில் மாற்றம் நிகழவேண்டும் என்று தீவிரமாக நம்புகிறோம். இது மாறுதலுக்கான நேரம். நிச்சயம் மாற்றம் நிகழும் என்று கருதுகிறேன்.

அரசியல் ஆர்வம் இல்லை...

அரசியல் ஆர்வம் இல்லை...

எனக்கும், எனது தந்தைக்கும் ஒரே மாதிரியான அரசியல் சிந்தனைகள் உண்டு என்றாலும் அவரைப்போல நான் அரசியலில் சேர மாட்டேன். அப்படியொரு ஆர்வமோ, விருப்பமோ என்னிடம் இல்லை.

யாருக்கு வாக்களிக்க வேண்டும்...

யாருக்கு வாக்களிக்க வேண்டும்...

யார் நல்லது செய்கிறார்களோ அல்லது நல்ல பணிகளை நிறைவேற்றுகிறார்களோ, அவர்களுக்கே ஓட்டுப் போடவேண்டும் என்று தனது தந்தை சொல்வார். இதை அவரும் பின்பற்றுவார். எனவே அவரது இதயம் சரியான இடத்தில் இருக்கிறது என்றுதான் சொல்வேன். அவர்களை போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்.

நடிப்பில் மகிழ்ச்சி...

நடிப்பில் மகிழ்ச்சி...

எனது தந்தை அரசியலில் இருக்கிறார் என்பதற்காக நானும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவசியமில்லை. அதை நோக்கி ஒருவரை தள்ளி விடவும் கூடாது. எனது வேலை சினிமாவில் நடிப்பது. அந்த வகையில் நான் இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.

நம்பிக்கை....

நம்பிக்கை....

எனது தந்தை போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன். எனது தந்தை தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நான் அரசியல் பிரமுகர் இல்லை...

நான் அரசியல் பிரமுகர் இல்லை...

என்னைவிட எனது தந்தையிடமிருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எனவே நான் அங்கே வருவதை அவர் விரும்பமாட்டார். மேலும், நான் ஒரு அரசியல் பிரமுகர் அல்ல. அங்கே போவதும் எனது வேலை கிடையாது.

பிரார்த்திக்கிறேன்...

பிரார்த்திக்கிறேன்...

இங்கிருந்து நடிப்பு சம்பந்தமான வேலை கவனிப்பதுதான் எனது வேலை. அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு. அவர் தேர்தலில் சிறப்பாக செயல்பட பிரார்த்திக்கிறேன்' என இவ்வாறு சோனாக்‌ஷி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X