ஒய் திஸ் கொலைவெறி.. கொரோனாவை இப்படித் தான் குத்தணுமாம்.. சோனாக்ஷிக்கு என்ன ஒரு ஆதங்கம்!
மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா பாக்ஸராக மாறியுள்ள தனது போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தெறிக்க விட்டு வருகிறார்.
Recommended Video
பழம்பெரும் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா தபங் படங்களில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஃபிளாஷ்பேக்கில் ஜோடியாக நடித்திருப்பார்.

சல்மான் கானுடன்
இயக்குநர் அபினவ் கஷ்யப் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் தபங் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தபங் 2 மற்றும் தபங் 3 என பத்து வருடங்களாக சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்சன், கலங்க் என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

லிங்கா
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அனுஷ்கா நடிப்பில் வெளியான லிங்கா படத்தில், பிளாஷ்பேக் போர்ஷனில் ரஜினிக்கு ஜோடியாக ஜாக்கெட் அணியாமல், சேலையை கட்டிக் கொண்டு செம செக்ஸியாக மணி பாரதி எனும் கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா தமிழ் படத்தில் நடித்திருப்பார்.

முருகதாஸ் இயக்கத்தில்
இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் வெளியான மெளனகுரு படத்தை பாலிவுட்டில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அகிரா என்ற டைட்டிலில் இயக்கி இருந்தார். சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஹீரோயின் சென்ட்ரிக் கதையாக அந்த படம் மாற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

பாக்ஸராக
குண்டான தேகத்துடன் அழகாக இருந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா, இந்த லாக்டவுனில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து பாக்ஸர் அவதாரம் எடுத்துள்ள தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்ட நடிகைகளும் லைக் போட்டுள்ளனர்.

கொரோனாவை குத்தணும்
கட்டுமஸ்த்தான உடம்போடு கிக் பாக்ஸர் போல போஸ் கொடுத்துள்ள பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை இப்படி குத்த வேண்டும் என்றும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். கண்ணுக்கு தெரிஞ்சா தானே அதை துவம்சம் செய்து விடலாம். அது தான் கண்ணுக்கே தெரியாமல் வாட்டி வதைக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

அடுத்தடுத்து
லாக்டவுன் முடிந்தவுடன் சோனாக்ஷி சின்ஹா அடுத்ததாக அஜய் தேவ்கனின் புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா படத்தில் சுந்தரவதன காடுகளில் வாசிக்கும் ஜெத்தா மாதர்பர்யா எனும் ரோலில் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்து, அர்ஜுன் கபூர் நடிப்பில் உருவாக உள்ள ஹனிபை என்ற படத்திலும் புக் ஆகி உள்ளார். பாபி பேடி இந்த படத்தை இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











