நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய்.. அமெரிக்காவில் தீவிர சிகிச்சை
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பெந்த்ரே மணிரத்னத்தின் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அர்ஜுனின் கண்ணோடு காண்பெதல்லாம் படத்திலும் நடித்துள்ளார்.

புற்றுநோய்
உடம்பில் வலி தொடர்ந்து இருக்கவே சோனாலி மருத்துவரிடம் சென்றுள்ளார். சோதனை செய்ததில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா
சோனாலி தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் அவர் உடலில் பல இடங்களுக்கு பரவிய பிறகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்
எதிர்பார்க்காத நேரத்தில் வாழ்க்கை அதிர்ச்சியை அளிக்கிறது. எனக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தார், நெருங்கிய நண்பர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார் சோனாலி.
நன்றி
நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் நான் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்து வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் இந்த போராட்டத்தை எதிர்கொள்கிறேன் என்கிறார் சோனாலி.
பிரார்த்தனை
சோனாலிக்கு புற்றுநோய் இருப்பது குறித்து அறிந்து பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











