Sonam Kapoor: இரண்டாவது வாரிசுக்கு தயாரான சோனம் கபூர்.. அடடே குழந்தை பிறக்கும் மாதம் தான் ஹைலைட்!
மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் இந்த நற்செய்தியை சோனம் கபூர் பகிர்ந்துள்ளார். தனது மகன் வாயுவுக்குப் பிறகு, சோனம் கபூரும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜாவும் மீண்டும் பெற்றோராகப் போகின்றனர். இந்த தகவல் தற்போது பாலிவுட் முழுவதும் மகிழ்ச்சியாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்டைலான 'ராய்' தோற்றத்தில், தனது பேபி பம்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களை சோனம் கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுடன் அவர் 'மதர்' (அம்மா) என்ற ஒற்றை வார்த்தையை எழுதி, அதனுடன் முத்தமிடும் ஈமோஜியையும் சேர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இரண்டாவது முறை கர்ப்பம்: இதே புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பகிர்ந்துள்ள சோனம் கபூர், குழந்தை 2026 வசந்த காலத்தில் பிறக்கும் என்ற செய்தியை அறிவித்துள்ளார். புகைப்படங்களில் அவர் இளஞ்சிவப்பு நிற ஃபார்மல் உடையில் காணப்படுகிறார். அவரது பேபி பம்ப் தெளிவாகத் தெரிகிறது. சோனம் கபூரின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல பிரபலங்கள் அவரது பதிவை லைக் செய்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தி பாலிவுட் உலகில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.சோனம் கபூர் நடிக்க வருவதற்கு முன்பு, 17 வயதில் சஞ்சய் லீலா பன்சாலியின் "Black" (2005) படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். அப்போது அவர் படப்பிடிப்புத் தளத்தில் ராணி முகர்ஜிக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பார்.
பெருமை: கேன்ஸ் ரெட் கார்பெர்ட்டில் தொடர்ந்து 10+ ஆண்டுகளாக இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டு, உலக அளவில் "Best Dressed" பட்டியல்களில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகை என்றால் அது சோனம் கபூர் தான். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குள் சென்றாலே அனைத்துவிதமான ஆடைகளையும் அணிந்து அதில் செம பியூட்டியாக போஸ்கள் கொடுத்துள்ளார். இவரது கிளாமர் புகைப்படங்களுக்கு என்று தனி ரசிகரள் பட்டாளமே இருக்கிறார்கள்.2018-ல் தொழிலதிபர் ஆனந்த் ஆஹூஜாவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு "சோனம் கபூர் ஆஹூஜா" என்று பெயரை மாற்றிக்கொண்ட முதல் பெரிய பாலிவுட் நடிகை அவர். இந்த தம்பதியருக்கு 2022-ஆகஸ்ட் 20-ல் ஆண் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு "வாயூ கபூர் ஆஹூஜா" (Vayu Kapoor Ahuja) என்று பெயர் வைத்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











