ஒரே மாசத்துல இது 2வது முறை... இப்படியா பண்ணுவீங்க? விமான நிறுவனத்தை கடுமையாகச் சாடிய ஹீரோயின்
மும்பை: பிரபல இந்தி நடிகை சோனம் கபூர், பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார்.
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இந்தி ஹீரோ அனில் கபூரின் மகளான இவர், தனுஷூடன் ரான்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இவர் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரிமாரியாக விமர்சித்துள்ளார்.
மூன்று முறை
அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், இந்த மாதம் மூன்று முறை பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது லக்கேஜ்ஜை இழந்துவிட்டேன். அதை வேறு விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்.
மன்னிப்பு
இனி பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இதுபற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?' என்று கேட்டிருந்தது.

கோபமாக பதில்
'எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு' என்று கோபமாகப் பதில் கூறியுள்ளார். இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்புக் கேட்டுள்ளது. விரைவாக உங்கள் லக்கேஜ் கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

பூஜா ஹெக்டே
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். கடந்த மாதம் எனது 2 லக்கேஜ்களை தொலைத்துவிட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை போல என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











