twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாளைக்கு திருமணம், ஆனால் தேனிலவு மட்டும்...: அதிர்ச்சி கொடுத்த தனுஷ் ஹீரோயின்

    By Siva
    |

    Recommended Video

    சோனம் கபூரின் திருமண ஓகே! ஆனா தேனிலவு?!

    மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூர் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு செல்லவில்லையாம்.

    பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது நீண்ட நாள் காதலரான ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் சிம்பிளாக நடந்தாலும் வரவேற்பு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்நிலையில் சோனம் தனது தேனிலவை தள்ளிப் போட்டுள்ளாராம்.

    கேன்ஸ்

    கேன்ஸ்

    கேன்ஸ் திரைப்பட விழா நாளை துவங்கி 19ம் தேதி வரை பிரான்ஸில் உள்ள கேன்ஸ் பகுதியில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் சோனம் நடக்க உள்ளார்.

    தேனிலவு

    தேனிலவு

    மே 14ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடக்கிறார் சோனம். இதனால் திருமணம் முடிந்த கையோடு பிரான்ஸுக்கு கிளம்புகிறார். ஆனந்த் அவருடன் கேன்ஸ் செல்லவில்லையாம்.

    ஷூட்டிங்

    ஷூட்டிங்

    கேன்ஸில் இருந்து திரும்பி வந்ததும் சோனம் ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். மேலும் வீர் தி வெட்டிங் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    துல்கர்

    துல்கர்

    துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடிக்கும் தி ஜோயா ஃபேக்டர் படத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் நடிக்கிறார். அந்த பட வேலைகளை முடித்த பிறகே தேனிலவுக்கு கிளம்புவாராம் சோனம்.

    நவம்பர்

    நவம்பர்

    சோனம் கபூர் அக்டோபர் அல்லது நவம்பர் தான் தேனிலவுக்கு கிளம்பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவர் படங்களில் பிசியாக இருப்பார். ராஞ்ஹனா படத்தில் தனுஷ் சோனம் கபூருடன் நடித்தார். இதனால் இந்த திருமண நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    According to reports, Bollywood actress Sonam Kapoor who is getting married to Anand Ahuja on may 8th is no hurry to go for honeymoon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X