காதலில் விழுந்த கதைக்குப் பின்னால் அந்த கருப்பு வெள்ளை போட்டோ..தனுஷ் பட நாயகியின் எமோஷனல் போஸ்ட்!
மும்பை: தனது காதல் கணவருக்கு தன்னை அறிமுகப்படுத்தியது இந்த போட்டோதான் என்று கூறியுள்ளார், தனுஷ் பட ஹீரோயின்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இந்தி ஹீரோ அனில் கபூரின் மகள் இவர். சஞ்சய் லீலா பன்சாலியின், சவாரியா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அடுத்து டெல்லி -6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாம்பே டாக்கிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் பட நாயகி
ஆனந்த் எல்.ராய் இயக்கிய ரான்ஜனா என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்தப் படம் தமிழில், டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த அவர், அப்போது தனுஷை புகழந்திருந்தார். இவர், தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

டெல்லியில்
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் லாக்டவுன் காரணமாக தனது காதல் கணவர் ஆனந்த் அகுஜாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். தினமும் ஏதாவது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர், கூடவே சில விஷயங்களை எழுதியும் வருகிறார்.

பிடித்த போட்டோ
இந்நிலையில், கருப்பு வெள்ளையில் த்ரோபேக் போட்டோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அதில் கேப்ஷனாக, இது எனக்குப் பிடித்த போட்டோ. நான் நடித்த 'நீரஜா' (2016) ரிலீஸ் ஆன நேரம். அதற்கு ஒரு நாளோ, இரண்டு நாட்களுக்குப் பிறகோ எடுக்கப்பட்ட போட்டோ அது. நீராஜாவின் வெற்றியும் பாராட்டும் வந்தபோதும் என்னால் பரவசத்தை உணரமுடியவில்லை. படத்தின் இயக்குனர், இது சம நிலையின் உணர்வு என்றார்.

எமோஷனல்
அப்போது உணர்ந்ததை விட, சிறந்த ஒன்றை உணர ஒரு வருடம் விடுமுறை எடுத்துக் கொண்டேன். அந்தப் பயணத்தில்தான் என் வாழ்க்கைத் துணைவரை சந்தித்துக் காதலில் விழுந்தேன். அவருக்கு என்னை அறிமுகம் செய்தது இந்த போட்டோதான். அதன் அடையாளமாக இந்த போட்டோ இருக்கிறது' என்று ஆரம்பித்து உணர்வு பூர்வமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரது கணவர், இப்போ ஏன் இவ்வளவு எமோஷனல் பதிவு? என்று கேட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











