கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்

By Siva

மும்பை: 14 வயது இருக்கும்போது யாரோ ஒருவன் தனது மார்பை தொட்டதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்தார்.

நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தற்போது தான் துணிந்து பேசி வருகிறார்கள். யாராவது மார்பு அல்லது பின்பக்கத்தை தொட்டால் பெண்கள் பயத்தில் உறைந்துவிடுகிறோம் என்று நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார்.

யாராவது தொட்டால் பயத்தில் உறையாமல் அவர்களை அடித்து நொறுக்குங்கள் என டாப்ஸி வீடியோ மூலம் அறிவரை வழங்கியிருந்தார். முன்னதாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

தியேட்டர்

தியேட்டர்

ரவீனா-அக்ஷய் குமார் நடித்த படத்தை பார்க்க மும்பையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சென்றேன். என்னுடன் என் தோழிகளும் வந்திருந்தார். அப்போது எனக்கு 14 வயது.

சமோசா

சமோசா

நாங்கள் சமோசா வாங்க வெளியே சென்றோம். வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது யாரோ ஒருவன் எனக்கு பின்னால் வந்து என் மார்பை பிடித்தான். உடனே நான் பயத்தில் உறைந்துபோய் நடுங்கினேன்.

அழுகை

அழுகை

என்ன நடந்தது என்பதை உணராமல் நடுங்கினேன். அழுதேன் இருப்பினும் படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பினேன். நான் ஏதோ தவறு செய்தது போன்று உணர்ந்தேன்.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

தியேட்டருக்கு சென்ற இடத்தில் நடந்த கொடுமை குறித்து நான் 2 ஆண்டுகள் எதுவும் தெரிவிக்கவில்லை. பலரும் இது போன்ற கொடுமைகளை சந்தித்திருப்பார்கள் என எனக்கு தெரியும் என்றார் சோனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X