அந்த இடம் மட்டும் பளீச்னு இருக்கு.. சோனம் கபூரின் தாராள மனசுக்கு குவிகிறது லைக்ஸ்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், கருப்பு நிற உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்ததன் மூலம் சோனம் கபூர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
மலங் படத்தின் ப்ரீமியர் காட்சிக்காக இப்படியொரு பிரத்யேகமான உடையில் நடிகை சோனம் கபூர் காட்சி தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாரிசு நடிகை
ஸ்லம் டாக் மில்லியனர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்திய அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து டெல்லி 6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், நீர்ஜா, பேட்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

தனுஷ் ஜோடி
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ராஞ்சனா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. அதில், ஜோயாவாக நடித்த சோனம் கபூரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்.

லெஸ்பியன் ஸ்டோரி
பாலிவுட்டில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சோனம் கபூர், கடந்த ஆண்டு வெளியான Ek Ladki Ko Dekha Toh Aisa Laga படத்தில் லெஸ்பியனாக நடித்து பாலிவுட்டையே ஸ்தம்பிக்க வைத்திருந்தார். ஷெல்லி சோப்ரா தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரெஜினா கஸாண்ட்ரா சோனம் கபூரின் லேடி லவ்வாக நடித்திருந்தார்.

செக்ஸி பிளாக் டிரெஸ்
கடந்த பிப்ரவரி 7ம் தேதி அனில் கபூர், திஷா படானி நடிப்பில் வெளியான மலங் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சோனம் கபூர் கருப்பு நிற உடையில் செம்ம செக்ஸியாக வந்திருந்தார். அந்த உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
பளீச்ன்னு தெரியுது
கருப்பு நிற கவர்ச்சி உடையில் சோனம் கபூர் தற்போது விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். மொத்தமும் கருப்பாக இருக்கும் போது, சோனம் கபூரின் முகம் மற்றும் முன்னழகு மட்டும் பளீச்ன்னு தெரிவது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.
செம்ம தாராளம்
ரோஸி அசோலின் வடிவமைத்த இந்த கவர்ச்சிகரமான கருப்பு டிரெஸ்சில் சோனம் கபூரின் முன்னழகு செம்ம தாராளமாக தெரிகிறது. கழுத்தை ஒட்டி ஒரே ஒரு நகையை மட்டும் அணிந்து இருக்கும் சோனம் கபூரின் ஹாட் புகைப்படங்களை தி ஹவுஸ் ஆஃப் பிக்சல்ஸ் செம்ம செக்ஸியாக எடுத்துள்ளது.
குவிகிறது லைக்ஸ்
தனது தந்தை அனில் கபூர் நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மலங் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட சோனம் கபூர், சுமார் 12 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











