அம்பிகாபதி நடிகையின் 2வது குழந்தை.. முதல் முறையாக போட்டோஸ் வெளியிட்ட சோனம் கபூர்!

மும்பை: தனுஷ் உடன் ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா தங்களின் இரண்டாவது குழந்தையை அண்மையில் வரவேற்றனர். மார்ச் 29 அன்று பிறந்த ஆண் குழந்தையின் முதல் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று, சோனம் மருத்துவமனையில் இருந்து சில படங்களை வெளியிட்டார். அதில், மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் போது, தன் பிறந்த குழந்தையை மென்மையாக அணைத்தபடி அவர் இருக்கும் ஒரு புகைப்படம் பலரின் இதயங்களை நெகிழச் செய்தது. அக்குழந்தை வெண்மையான துணியால் சுற்றப்பட்டு, தன் மார்பில் அணைத்தபடி கண்களை மூடி புன்னகையுடன் சோனம் காட்சியளித்தார். மற்றொரு படத்தில் அவர் உணவு சாப்பிடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

Sonam Kapoor shares her second new born son photos and says thanks to fans and wellwishers
Photo Credit:

தன் சமூக வலைத்தளப் பதிவில், குழந்தையை பாதுகாப்பாக இவ்வுலகுக்கு கொண்டு வந்த மருத்துவக் குழுவினருக்கு மனம் உருகிய நன்றியைத் தெரிவித்தார். படங்களைப் பகிர்ந்த சோனம், "வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

"எங்கள் இரண்டாவது மகனை வரவேற்ற HN ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு நம்பமுடியாத அனுபவத்திற்காக நன்றி. இது ஒவ்வொரு விதத்திலும் மெய்யாகவே சிறப்பானது. எனது மகப்பேறு மருத்துவர் (OBGYN) டாக்டர் அவான் கடினா, என் இரண்டு கர்ப்ப காலங்களிலும் எனக்கு வழிகாட்டினார். அவரது பராமரிப்பில் அரிதான நம்பிக்கை, அமைதி மற்றும் உறுதியுணர்வு உள்ளது. அவரது ஆதரவு, ஞானம் மற்றும் கருணைக்கு நான் முடிவில்லாமல் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்," என சோனம் பதிவு செய்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முழுக் குழுவிற்கும், மிகச்சிறந்த தொழில் வல்லுநர்களாக இருந்ததற்கும், உங்கள் மென்மை, இரக்கம் மற்றும் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டதற்கும் நன்றி. இத்தகைய அக்கறை மருத்துவமனையில் எப்போதும் எதிர்பார்க்காதது, ஆனால் இருக்க வேண்டிய ஒன்று. இந்த அனுபவம் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது."

"நிதா ஆன்ட்டி உருவாக்கியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. அங்கே சிறப்பும், இரக்கமும் ஒருமித்துத் தடையின்றி இணைந்துள்ளன. நான் நன்றியுடனும், அக்கறையுடனும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். எங்களுக்காக அக்கறை செலுத்திய நம்பமுடியாத குழுவுக்கு நன்றி" என சோனம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சோனம் கபூரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தது. ரசிகர்கள் கருத்துப் பிரிவில் அன்பையும், பாராட்டுகளையும் அள்ளிக்குவித்தனர். சோனாக்ஷி சின்ஹா, பூமி பெட்னேகர், சஞ்சய் கபூர் போன்ற பிரபலங்கள் இதய ஈமோஜிகளைப் பதிவிட்டனர்.

மார்ச் 29 அன்று இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்பதை, சோனம் மற்றும் ஆனந்த் ஒரு குறிப்பு மூலம் இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். அதில், "அளவற்ற நன்றியுடனும், அன்பு நிறைந்த இதயங்களுடனும், மார்ச் 29, 2026 அன்று எங்கள் ஆண் குழந்தையின் வருகையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எங்கள் குடும்பம் வளர்ந்துள்ளது. அவனது வருகையால் எங்கள் இதயங்கள் மிக அழகான வழியில் விரிவடைந்துள்ளன" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அக்குறிப்பில், "வாயு தனது சிறிய சகோதரனை வரவேற்க அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறான். இந்த பொக்கிஷமான புதிய உயிர் எங்கள் இல்லத்தை மகிழ்ச்சியுடனும், கருணையுடனும் நிரப்பியுள்ளது. குடும்பமாகிய நாங்கள் நான்கு பேர் என்ற இந்த அழகான புதிய அத்தியாயத்தைத் தொடங்க சோனம் மற்றும் ஆனந்த் நன்றியுடன் இருக்கிறோம்" என்றும் மேலும் தெரிவித்திருந்தனர்.

சோனம், 2015 இல் 'ப்ரேம் ரதன் தன் பாயோ' படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் போது ஆனந்தை சந்தித்தார். தன் நண்பர்கள் ஆனந்தின் நண்பர்களுடன் தன்னை இணைக்க விரும்பினாலும், தான் ஆனந்துடன் தான் அதிகம் பேச ஆரம்பித்ததாக சோனம் முன்பு தெரிவித்திருந்தார். 2018 இல், இருவரும் ஒரு தனிப்பட்ட திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.

2022 இல் சோனம், ஆனந்த் தங்களின் முதல் மகன் வாயுவை வரவேற்றனர். நவம்பர் 2025 இல் நடிகை, இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்தார். பேபி பம்ப்பை வெளிப்படுத்தும் படங்களைப் பகிர்ந்த நிலையில், பலரும் அவரை வாழ்த்தினர். இன்று அவர் தனது 2வது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X