7 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோதும் தீபிகா, சோனம்: ஜெயிக்கப் போவது யாரு?
மும்பை: 7 ஆண்டுகள் கழித்து தீபிகா படுகோனே, சோனம் கபூர் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதுகின்றன.
தீபிகா படுகோனேவும், சோனம் கபூரும் கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்கள். தீபிகாவின் ஓம் சாந்தி ஓம், சோனம் நடித்த சாவரியா பாக்ஸ் ஆபீஸில் மோதின.
அந்த மோதலின் முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும். இல்லை என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்

ஓம் சாந்தி ஓம்
ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. சோனம், ரன்பிர் கபூர் நடித்த சாவரியா அட்டர் பிளாப் ஆனது.

தீபிகா
ஓம் சாந்தி ஓம் படத்தை அடுத்து தீபிகா பல்வேறு படங்களில் நடித்துவிட்டார். சோனம் கபூரும் அப்படி தான். ஆனால் அதில் வித்தியாசம் உள்ளது.

ஹிட் நாயகி
தீபிகா ரேஸ் 2, ஏ ஜவானி ஹை தீவானி, சென்னை எக்ஸ்பிரஸ், ராம் லீலா என்று அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பாலிவுட் கொண்டாடும் நாயகி ஆகிவிட்டார்.

சோனம்
சோனம் கபூருக்கு கடந்த ஆண்டு ரிலீஸான ராஞ்ஹனா, பாக் மில்கா பாக் ஆகிய படங்கள் தான் ஓடின. அதிலும் ராஞ்ஹனாவில் தனுஷ் நல்ல பெயர் தட்டிச் சென்றுவிட்டார்.

மீண்டும் மோதல்
தீபிகா நடித்துள்ள ஃபைன்டிங் ஃபேனி வரும் செப்டம்பர் 12ம் தேதியும், சோனம் நடித்துள்ள ஹுப்சூரத் படம் செப்டம்பர் 19ம் தேதியும் ரிலீஸாகின்றன. ஆக 7 ஆண்டுகள் கழித்து தீபிகா, சோனம் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் மோதுகிறார்கள்.

வெற்றி யாருக்கு?
7 ஆண்டுகளுக்கு முந்தைய மோதலில் தீபிகா வெற்றி பெற்றார். தற்போது நடக்கப் போகும் மோதலில் ஜெயிக்கப் போவது யாரு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











