தீபாவளிக்கு முல்தானி மிட்டியில் உடையா?.. பார்க்கவே ஒரு மார்க்கமா இருக்கே.. திணற வைக்கும் தனுஷ் ஜோடி!

மும்பை: தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனம் கபூர் ஃபேஷன் துறையில் ரொம்பவே ஆர்வமாக உள்ளவர். ஓரினச்சேர்க்கையாளர்களின் படங்களில் எல்லாம் ரெஜினா கசாண்ட்ராவுடன் இணைந்து படு போல்டாக நடித்த அனில் கபூரின் மகளான இவர் தற்போது தீபாவளிக்கு புதுவிதமான உடையை அணிந்துக் கொண்டு ரசிகர்களையும் பிரபலங்களையும் குறிப்பாக பாலிவுட் நடிகைகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் முதல்வன் அர்ஜுன் போல திடீரென சேற்றில் இருந்து எழுந்து வருவது போல வரும் சீனில் விவேக் பதறிப்போக இது முல்தானி மிட்டி நேச்சுரோ தெரபி எனக் கூறுவார்.

sonam kapoor diwali 2024 dhanush 2024

பெண்கள் முகம் பொலிவாக இரவு நேரங்களில் முல்தானி மிட்டியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அதை கொண்டே இப்படியொரு மேலாடையை உருவாக்க முடியும் என உருவாக்கி அதை அணிந்தும் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சோனம் கபூர்.

சொக்க வைக்கும் சோனம் கபூர்: பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூருக்கு 39 வயதாகிறது. சாவரியா படத்தின் மூலம் அறிமுகமான இவர் ராஞ்சனா, பிரேம் ரத்தன் தான் பாயோ, நீர்ஜா, வீர் தி வெட்டிங் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்ட சோனம் கபூர் இந்த தீபாவளிக்கு புதுவிதமான உடையை முயற்சி செய்துள்ளார்.

முல்தானி மிட்டியில் லெஹங்கா: பிரபல ஆடை வடிவமைப்பாளரான அபு ஜானி சந்தீப் கோஸ்லா இந்த தீபாவளிக்காக பிரத்யேகமாக நடிகை சோனம் கபூருக்கு முல்தானி மிட்டி, கர்நாடகா செம்மண், கதர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தீபாவளி ஸ்பெஷல் உடையை அணிந்துக் கொண்டு அழகிய ஆபரணங்களையும் அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை சோனம் கபூர்.

sonam kapoor diwali 2024 dhanush 2024

ஷாக்கான நடிகைகள்: உர்ஃபி ஜாவேத் வாட்ச், பலூன், பேப்பர், ஸ்டிக்கர், டேப் என கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து ஒரு பக்கம் உடை என்கிற பெயரில் படு ஆபாசமாக போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்து வரும் நிலையில், பிரபல நடிகை சோனம் கபூர் முல்தானி மிட்டியில் லெஹங்கா ரெடி செய்து அணிந்து போஸ் கொடுத்ததை பார்த்து பல டாப் நடிகைகள் ஷாக் ஆகி கமெண்ட்டுகளை குவித்துள்ளனர்.

மழை பெய்தால் என்னாகும்?: செம்மண் மற்றும் முல்தானி மிட்டி உள்ளிட்ட பொருட்களினால் இந்த உடை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், மழை பெய்தால் என்ன ஆகும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். முகத்தில் முல்தானி மிட்டியை போட்டுக் கொண்டு அதை எடுக்கவே சிரமமாக இருக்கும். இவர் எப்படித்தான் இப்படி எல்லாம் அந்த இடத்தில் ஆடையாக போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கிறாரோ என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

sonam kapoor diwali 2024 dhanush 2024

பாலிவுட்டில் களைகட்டும் தீபாவளி: நம்ம ஊரில் இப்படி பிரபலங்களின் இல்லங்களில் தீபாவளி பண்டிகை நடக்கிறது வாங்க என யாருமே சொல்ல மாட்டார்கள். ஆனால், பாலிவுட்டில், ஏக்தா கபூர், அம்பானி என பல பிரபலங்களின் வீட்டு தீபாவளி பண்டிகைகளுக்கு சினிமா பிரபலங்கள் புதுசு புதுசா உடையணிந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X