»   »  சோனாஸ் டூ சோனியா!

சோனாஸ் டூ சோனியா!

Subscribe to Oneindia Tamil

சிவப்பதிகாரம் படத்தில் குத்தாட்டம் போட்ட சோனாஸ் தனது பெயரை சோனியா என மாற்றிக் கொண்டு விட்டார். ஏற்கனவே ஒரு சோனாஇருப்பதால் குப்பாச்சு குழப்பாச்சைத் தவிர்க்க இந்த பெயர் மாற்றமாம்.

சோனா என்கிற சோனாஸ். கோலிவுட்டில் மறக்க முடியாத பெயராக மாறி வருகிறார் சோனாஸ். ஆள் யாரென்று தெரியாதவர்கள், சர்ருன்னுசிவப்பதிகாரத்திற்குப் போங்கள். அதில் கும்தலக்கா குத்தாட்டம் போட்டவர்தான் சோனாஸ்.

முதல் படத்தில் குத்தாட்டம் போட்ட சோனாஸ், இப்போது நாயகியாக அதிரடி புரமோஷன் கண்டுள்ளார். கேள்விக்குறி படத்தின் நாயகி நம்மசோனாஸ்தான்.

கொழுக் மொழுக்கென புதுசா செஞ்சு வைச்ச பிள்ளையார் கொழுக்கட்டை கணக்கில் படு ஷோக்காக இருக்கிறார் சோனாஸ். இவரைப் போலவேஇன்னொரு சோனாவும் கோலிவுட்டில் கொடியேத்தி வருகிறார்.

அவர் முரட்டுப்பயல் படத்தில் ஹீரோயின். இதனால் கேள்விக்குறி பட இயக்குநர் (இவேரதான் படத்தோட நாயகனும்!) ஜெய்லானி குழப்பமாகிவிட்டார். நம்ம ஹீரோயின் பெயரை மாற்றி விடலாம் என முடிவு செய்த ஜெய்லானி, சோனாஸ் காதில் ஓத, அவரும் ஆமோதிக்க இப்போதுசோனாஸ் சோனியாவாகி விட்டார்.

சோனியா என்ற பெயரில் நடிகை யாரும் கோலிவுட்டில் இப்போதைக்கு இல்லை. இருந்த ஒருவரும் (சோனியா அகர்வால்) செல்வராகவனைகல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகிவிட்டார். அதே நேரத்தில்சின்னத் திரையில் சோனியா என்று ஒரு நடிகை இருக்கிறார். இதனால் ஏதாவதுகுழப்பம் வருமா என்று இப்போது சோனாஸ் குழம்பி வருகிறாராம்.

பெயரை விட்டுத் தள்ளுங்க. சோனாஸுக்கு கிளாமர் நடிப்புதான் ரொம்பப் பிடித்திருக்கிறதாம். ஏனாம்? கிளாமர்தான் சார் இப்போது சினிமாவில்லேட்டஸ்ட் ஸ்டைல். கிளாமர் நடிகைகளுக்குத்தான் இப்போது நல்ல மரியாதை.

சாவித்ரி ரேஞ்சுக்கு நடிக்கும் காலம் எல்லாம் ஓடி விட்டது. இப்போது அப்படி நடித்தால் ஓரம் கட்டி ஒப்பேத்தி விடுவார்கள். கடைசி வரை தங்கச்சிகேரக்டரிலேயே உட்கார வைத்து விடுவார்கள். கிளாமர்தான் தூக்கி விடும், டப்பையும் வாரிக் கொடுக்கும் என்று படு பிராக்டிகலாக வசனம்பேசுகிறார் சோனாஸ்.

நல்ல வாய், நல்லா பொழச்சுக்குவார்!

Read more about: sonaas becomes sonia

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil