இசைப்பள்ளி தொடங்கும் சோனியா அகர்வால்!
நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள சோனியா அகர்வால் அடுத்து ஒரு இசைப்பள்ளியை தொடங்குகிறார்.
செல்வராகவனுடன் திருமணம், பின்பு விவாகரத்து என்று சோதனைகளைச் சந்தித்த சோனியா, மீண்டும் கதாநாயகியாகவே நடிக்க ஆரம்பித்துள்ளார்.
திருமணத்துக்குப் பின் மீண்டும் கதாநாயகி என்ற இடத்தைப் பிடித்த ஒரே நாயகி சோனியா அகர்வாலாகத்தான் இருக்க முடியும்.
தற்போது அவர் நடித்துள்ள மேலும் 3 படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன.
சினிமாவில் நடிப்பதோடு நின்றுவிடாமல், அடுத்து இசைப் பள்ளி ஒன்றையும் துவக்க உள்ளார் சோனியா அகர்வால்.
சென்னையில் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்த இசைப் பள்ளியை ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கி வைக்கிறார். இந்த இசைப் பள்ளியை அகர்வாலின் சகோதரர் நிர்வகிக்க உள்ளார். இவர் யுவன் சங்கர் ராஜாவிடம் இசைப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications
