நீச்சல் குளம் அருகே அப்படியொரு டிரெஸ்.. சோனியா அகர்வால் ரொம்பவே மாறிட்டாங்களே.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

செல்வராகவன் தனது உதவி இயக்குநரான கீதாஞ்சலியை திருமணம் செய்துக் கொண்டு 3 குழந்தைகளுக்கு தகப்பனாக மாறிவிட்டார். ஆனால், செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் அதன் பின்னர் மறுமணம் ஏதும் செய்துக் கொள்ளாமல் இன்னமும் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. சோனியா அகர்வால் மற்றும் ரவிகிருஷ்ணா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சேர்ந்து கொடுத்த பேட்டிகளும் டிரெண்டாகின.

Sonia Agarwal shares her latest swimming pool photos

நீச்சல் குளம் அருகே: இன்ஸ்டாகிராமில் எப்போதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சோனியா அகர்வால். பிரபல நடிகையாக இருந்தாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 2 லட்சம் ஃபாலோயர்கள் தான் உள்ளனர். இளம் நடிகைகளே பல மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் சோஷியல் மீடியாவில் அதிக கவனத்தை செலுத்தாமல் சோனியா அகர்வால் இருந்து வந்தாலும் எப்போதாவது புதிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார் தற்போது நீச்சல் குளம் அருகே எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

கோட் சூட்: பிங்க் நிற கோட் பிளேசர் மற்றும் பிங்க் நிற கவுன் அணிந்துக் கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை நடிகை சோனியா அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நீச்சல் குளத்திற்கும் கோட் சூட் உடன் வந்திருக்கீங்களே அப்படியே ஒரு நீச்சல் குள போட்டோவை போட்டால் ஜில்லென இருக்கும் என கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பேய் படம்: 7/ஜி என்கிற டைட்டிலில் ஒரு பேய் படத்தில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். விரைவில் அந்த படம் வெளியாக உள்ளது 7ஜி 2ம் பாகத்தை செல்வராகவன் உருவாக்கப் போவதாக அவர் ஒரு பக்கம் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X