அக்கா, அண்ணின்னாலும் ஓகேதான், சோனியா அகர்வால்
கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்த சோனியா அகர்வால் தற்போது அக்கா, அண்ணி வேட்ங்களுக்கும் ஓ.கே. சொல்லி வருகிறாராம்.
நடிகை சோனியா அகர்வால் சொல்வராகவனைப் பிரிந்த பிறகு மீண்டும் முழுவீச்சில் நடிப்பில் இறங்கினார். அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதற்கு அவர் நடித்தால் கதாநாயகியாகத் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டார். இதையடுத்து தான் அவருக்கு ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நாயகியாக நடிக்கும் வாயப்பு கிடைத்தது.
நடிகை ரேவதிக்கு பிறகு திருமணமாகியும் நாயகியாகத் தொடர்வது சோனியா அகர்வால் மட்டும் தான் என்று பேசப்பட்டது. இந்நிலையில் என்ன நடந்துச்சோ, என்னவோ தெரியவில்லை, அம்மணி திடீர் என்று அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.
நாயகியாக நடித்தால் தானா, எந்த வேடத்திலும் தன்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று நினைத்துவிட்டாரோ.
Comments


Click it and Unblock the Notifications
