“உன்னால் என்னால்”... வில்லியாகும் தனுஷ் ஹீரோயின்!

புதிய படத்தில் வில்லியாக நடிக்க இருக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.

சென்னை: உன்னால் என்னால் என்ற படத்தின் மூலம் வில்லியாகிறார் நடிகை சோனியா அகர்வால்.

தமிழில் செல்வராகவனின் காதல் கொண்டேன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அப்பட வெற்றியைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுப்பயலே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.

ஆனால், அவரது திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. செல்வராகவனை விவாகரத்து செய்தார் சோனியா அகர்வால். விவாகரத்திற்குப் பின்னர் விவேக் ஜோடியாக பாலக்காட்டு மாதவனில் நடித்தார்.

வில்லியான சோனியா அகர்வால்:

வில்லியான சோனியா அகர்வால்:

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார் சோனியா அகர்வால். ஆனால் இம்முறை அவர் நாயகியாக நடிக்கவில்லை, வில்லியாக களமிறங்குகிறார்.

புதிய படம்:

புதிய படம்:

ஜெயகிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ‘உன்னால் என்னால்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜெகா, சஹானா, ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற இந்தப் படத்தில் சோனியா அகர்வால் வில்லியாக நடிக்கிறார்.

கதை:

கதை:

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ். அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார், அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும். இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் இப்படத்தின் கதை

அதிரடி வில்லியாக சோனியா அகர்வால்:

அதிரடி வில்லியாக சோனியா அகர்வால்:

தோற்றத்தில் எப்போதும் அமைதியானவராக காணப்படும் சோனியா அகர்வால் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலும் இப்படத்தில் அமைதியான தோற்றத்தில், அதிரடி வில்லியாக மிரட்டியிருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X