»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் கொண்டேனில் நடிக்க மறுத்த ஷெரீன் அதற்காக இப்போது மிகவும் வருத்தத்தில் உள்ளாராம்.

தன் இளைய மகன் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை படம் எடுத்த கஸ்தூரி ராஜா, அதில் ஷெரீனைஅறிமுகப்படுத்தினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட.

இதையடுத்து தனது மூத்த மகன் செல்வராகவனைக் கொண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்க முடிவுசெய்தபோதே சென்டிமெண்டலாக ஷெரீனையே நடிக்க வைக்க நினைத்து அவரை அணுகினார்.

ஆனால், துள்ளுவதே இளமையில் நடித்தபோது தன்னை தந்தையும் மகனும் பாடாய் படுத்தியதால் நொந்துபோய் இருந்தார் ஷெரீன், மீண்டும் அவர்கள் கால்ஷீட் கேட்டு வந்தபோது பழைய நினைவுகள் எல்லாம் மனதில்திரையாட கையெடுத்து கும்பிட்டு நடிக்க மறுத்துவிட்டார் ஷெரீன்.

இதனால் கடுப்படைந்த கஸ்தூரி ராஜாவும் மற்றும் அவரது மகன்களும், மும்பையிலிருந்து சோனியாவை பிடித்துவந்து நடிக்க வைத்தனர்.

படம் இப்போ பிச்சுக்கிட்டு ஓடுவதோடு, சோனியாவின் நடிப்பும் ஆஹா, ஓஹோ என்று பேசப்பட்டு வருகிறது.சோனியாவுக்கு நிறைய வாய்ப்புக்களும் தேடி வர ஆரம்பித்துவிட்டதால் இப்போது ஷெரீன் படு சோகத்தில்இருக்கிறாராம்.

இந்தப் படத்துடன் சேர்ந்து ரிலீசான ஷெரீன் நடித்த விசில் படம் சொல்லிக் கொள்ளும்படியாக ஓடவில்லை.

ஷெரீனை விட அதிகமாக கவர்ச்சி காட்டத் தயார் என்று சோனியாவே இயக்குனர்களையும்,தயாரிப்பாளர்களையும் நேரில் சந்துத்து சான்ஸ் கேட்டு வருகிறார். இதனால் ஷெரீனுக்கு வந்த சில சான்ஸ்களும்சோனியா பக்கம் போய்விட ஷெரீனின் சோகம் அதிகமாகிக் கொண்டே போகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil