»   »  சோனியா.. கதையும் கனவும்

சோனியா.. கதையும் கனவும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பரிட்சையில் பெயில் ஆன மாதிரி எப்போதும் ஒரு சோக முகத்தோடு உலவி வந்தாலும் நன்றாக நடிப்பவர் சோனியா அகர்வால்.

செல்வராகவன் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த மாதிரி தொடர்ந்து அவரது படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்தவர்இப்போது மடமடவென வெளிப் படங்களில் புக் ஆக ஆரம்பித்திருக்கிறார்.

ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.

இதில் கல்லூரியின் கதையில் ஆர்யா என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். பார்க்க இந்திக்கார பையன் மாதிரி இருந்தாலும்தமிழர்தானாம். நீண்ட நாட்களுக்குப் பின் தமிழுக்கு ஒரு ஹேண்ட்சம் ஹீரோ கிடைத்திருக்கிறார் என்கிறார்கள்.

புதுப் பையன் என்றாலும் சோனியாவுடன் நல்ல நெருக்கமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ.


கல்லூரி வாழ்வை முடித்துவிட்டுப் பிரியும் ஒரு மாணவனும் மாணவியும் 5 வருடம் கழித்து சந்திப்போம் என பேசிவைத்துவிட்டுப் பிரிகிறார்கள்.

ஐந்து வருடத்துக்குப் பின் சந்திக்கிறபோது ஏற்படுகிற பரவசம், அதுவே காதலாவது, அப்புறம் பிரச்சனையாவது என்றுவித்தியாசமான கதை இது.

சோழா பொன்னுரங்கம் தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ஜெய்வர்மா என்பவரும் நடிக்கிறார். யுவன் சங்கர்ராஜாவின் இசையமைப்பில் அழகிய பாடல்கள் வந்துள்ளனவனாம். படப்பிடிப்பு செங்கல்பட்டு, சென்னை ஏரியாவில் நடந்துவருகிறது.

செங்கல்பட்டில் திரிவேணி அகாடெமி என்ற இட்தில் ஒரு கல்லூரி மாதிரியே செட் போட்டு படத்தை எடுத்து வருகிறார்கள்.இதற்கு ரூ. 30 லட்சம் செலவிட்டார்களாம். பேசாமல் காலேஜே கட்டியிருக்கலாம்.

படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார்.

இதைத் தவிர ஸ்ரீகாந்துடன் மீண்டும் ஜோடி சேரப் போகிறார் சோனியா. இந்தப் படத்தை இயக்கப் போவது தமிழுக்கு ரொம்பவேபரிச்சயமான மலையாள இயக்குனர் பாசில்.

சோனியா- ஸ்ரீகாந்த் நடிக்க கரு.பழனியப்பன் இயக்கிய சதுரங்கம் படம் இழு இழு என ஜவ்வாகப் போய்விட்டது. இந் நிலையில்ஒரு நாள் ஒரு கனவு படத்தில் இந்த இருவரும் மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.

படத்தைத் தயாரிப்பது லட்சுமி மூவி மேக்கர்ஸ். ரேணுகா மேனன்-ஜெயம் ரவியை வைத்து பிரமாண்டமான முறையில் தாஸ்என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டே மீடியம் பட்ஜெட்டில் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்கள்.

பாசில் படம் என்றாலே இசை இளையராஜா தானே. இதிலும் அவர் தான். படப்பிடிப்பு பாசிலின் சொந்த ஊரான கேரளாவிலும்மற்றும் கண்ணுக்கு குளுமையான பொள்ளாச்சி ஏரியாவிலும் நடந்து வருகிறது.

கதை குறித்து பாசிலிடம் கேட்டால், யாரிடமும் தோற்க விரும்பாத ஒருவன், எல்லோரையும் தோற்கடிக்க விரும்பும் ஒருத்தி.. இந்தஇருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தால்.. எப்படி இருக்கும். அது தான் கதை என்றார். அட வித்தியாசமா இருக்கே !!.

இந்தப் படங்கள் தவிர வேண்டியவரான செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை படத்திலும் நடிக்கிறார்சோனியா. அதில் சோனியா தவிர ஸ்னேகாவும் இருக்கிறார். படத்தில் சோனியாவுக்கு வைக்கப்பட இருந்த முக்கிய காட்சிகளைஎல்லாம் கட் செய்துவிட்டாராம் செல்வா.

ஸ்னேகாவுக்கே முக்கியத்துவமாம். இதனால் செல்வா-சோனியா இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டானதாகவும்சொல்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil