twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைரக்டராகும் சோனியா சோனியா அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விரைவில் டைரக்டராகப் போகிறார். தற்போது நடித்து வரும்2 படங்களை முடித்து விட்டு டைரக்ஷனில் தனக்கு உதவியாக இருக்குமாறு அன்புக் கட்டளைபோட்டிருக்கிறாராம் செல்வராகவன்.சமீபத்தில் அறிமுகமான நடிகைகளில் கொஞ்சம் நடிக்கத் தெரிந்தவர் என்ற பெயரெடுத்திருப்பவர் சோனியாஅகர்வால். காதலில் தோல்வியடைந்தவர் மாதிரி எப்போதுமே தனது முகத்தை சோகமாக வைத்திருந்தாலும்,இவரது காதல் விரைவில் கைகூடும் என்றே தெரிகிறது.யார் அந்த பிளாக் ஷீப் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லையே..!தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும்? செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.இது மட்டுமா? இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஒரு மலைஉச்சியில் நடந்தது. மூன்று கி.மீ. கரடு முரடான மலைப் பாதையில் கஷ்டப்பட்டு ஏறினால் தான் அங்குசெல்லமுடியும்.நடப்பதற்கே மிகவும் கஷ்டம் என்பதால் சாப்பாடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை. சிரமத்தைபொருட்படுத்தாமல் மலை ஏறிய சோனியா, மனம் கோணாமல் இருந்ததுடன் ஒரு நாள் முழுவதும் சாப்பாட்டைபுறக்கணித்து வெறும் பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டு நடித்துக் கொடுத்தாராம்.இப்படி சோறு, தண்ணியில்லாமல் கலைக்காக கஷ்டப்படும் சோனியா, நடிப்புக்கு முழுக்குப் போடப்போகிறார்என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது.ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு தனது அன்புக்குரியவர் செல்வராகவனின்புதுப்பேட்டையில் சோனியா நடிக்கிறார். இது தான் இவரது கடைசிப் படமாக இருக்குமாம்.இதற்குப் பிறகு தனக்கு உதவியாக டைரக்ஷனில் கவனம் செலுத்துமாறு செல்வராகவன் அன்புக்கட்டளைபோட்டிருக்கிறாராம்.எனவே ரசிகர்களே, சோனியாவை இனிமேல் திரைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும்.

    By Staff
    |

    சோனியா அகர்வால் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விரைவில் டைரக்டராகப் போகிறார். தற்போது நடித்து வரும்2 படங்களை முடித்து விட்டு டைரக்ஷனில் தனக்கு உதவியாக இருக்குமாறு அன்புக் கட்டளைபோட்டிருக்கிறாராம் செல்வராகவன்.

    சமீபத்தில் அறிமுகமான நடிகைகளில் கொஞ்சம் நடிக்கத் தெரிந்தவர் என்ற பெயரெடுத்திருப்பவர் சோனியாஅகர்வால். காதலில் தோல்வியடைந்தவர் மாதிரி எப்போதுமே தனது முகத்தை சோகமாக வைத்திருந்தாலும்,இவரது காதல் விரைவில் கைகூடும் என்றே தெரிகிறது.

    யார் அந்த பிளாக் ஷீப் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லையே..!

    தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கும் ஒரு கல்லூரியின் கதை, பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு ஆகியபடங்களில் நடித்து வருகிறார்.

    ஒரு கல்லூரியின் கதை படத்தில் இவர் வழக்கம் போல படத்துடன் மிகவும் ஒன்றிப் போய் நடித்து வருகிறாராம்.இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள்.. சோனியா அகர்வாலின் பெயர் மாறப்போகிறது என்கிறார்கல்லூரியின் கதை இயக்குனர் நந்தா பெரியசாமி.

    ஏனுங்க, சோனியாங்கிற பேரு நல்லாத்தானே இருக்கு , அந்தப் பெயரை ஏன் மாற்றணும்? செல்வராகவன் சார்கோவிச்சுக்கப் போறாரு என்று அப்பாவியாய் அவரிடம் கேட்டோம்.

    பொறுங்கள் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தார் நந்தா.. கல்லூரியின் கதை படத்தில் ஜோதி என்றஅய்யங்கார் ஆத்துப் பொண்ணாக சோனியா நடிக்கிறார்.

    இந்தப் படம் வெளிவந்த பிறகு பாருங்கள், அதுவரை சோனியா என்று கூப்பிட்டவர்கள் ஜோதி என்று தான்கூப்பிடப் போகிறார்கள். அந்த அளவிற்கு அந்தப் படத்தில் ஜோதியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்கிறார்பெருமை பொங்க.

    இது மட்டுமா? இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஒரு மலைஉச்சியில் நடந்தது. மூன்று கி.மீ. கரடு முரடான மலைப் பாதையில் கஷ்டப்பட்டு ஏறினால் தான் அங்குசெல்லமுடியும்.

    நடப்பதற்கே மிகவும் கஷ்டம் என்பதால் சாப்பாடு எதுவும் எடுத்துச் செல்லவில்லை. சிரமத்தைபொருட்படுத்தாமல் மலை ஏறிய சோனியா, மனம் கோணாமல் இருந்ததுடன் ஒரு நாள் முழுவதும் சாப்பாட்டைபுறக்கணித்து வெறும் பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிட்டு நடித்துக் கொடுத்தாராம்.

    இப்படி சோறு, தண்ணியில்லாமல் கலைக்காக கஷ்டப்படும் சோனியா, நடிப்புக்கு முழுக்குப் போடப்போகிறார்என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது.

    ஒரு கல்லூரியின் கதை, ஒரு நாள் ஒரு கனவு படங்களுக்குப் பிறகு தனது அன்புக்குரியவர் செல்வராகவனின்புதுப்பேட்டையில் சோனியா நடிக்கிறார். இது தான் இவரது கடைசிப் படமாக இருக்குமாம்.

    இதற்குப் பிறகு தனக்கு உதவியாக டைரக்ஷனில் கவனம் செலுத்துமாறு செல்வராகவன் அன்புக்கட்டளைபோட்டிருக்கிறாராம்.

    எனவே ரசிகர்களே, சோனியாவை இனிமேல் திரைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும்.

      Read more about: director sonia
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X