»   »  திண்டாடிய ராக்கம்மா!

திண்டாடிய ராக்கம்மா!

Subscribe to Oneindia Tamil

இந்தி நடிகையும், முன்னாள் மிஸ் இந்தியாவுமான சோனு வாலியாவுக்கு செக் மோசடி வழக்கில் கோர்ட்டிலிருந்து பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் சரணடைந்த சோனு, ஜாமீனுக்கான பணம் இல்லாமல் திண்டாடிப் போனார்.

மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் சோனு வாலியா. பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் தலை காட்டியுள்ளார். தளபதி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான அடி ராக்கம்மா கையைத் தட்டு பாட்டுக்கு, ரஜினியுடன் சேர்ந்து கலக்கலாக ஆடியுள்ளார் சோனு வாலியா.

கடந்த 2005ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மும்பை இந்துஜா மருத்துவமனையில் சோனு வாலியா அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்காக தனது உறவினர் ஒருவரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கினார்.

பின்னர் இப்பணத்தைத் திருப்பித் தருவதற்காக சோனு வாலியா, 2 காசோலைகளை தனது உறவினரிடம் கொடுத்தார். ஆனால் அந்தகாசோலைகள், சோனுவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விட்டன.

இதையடுத்து சோனுவின் உறவினர் மும்பை பந்த்ரா பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில்ஆஜராகுமாறு கூறி பலமுறை சம்மன் அனுப்பியும் சோனு வாலியா வரவில்லை.

இதையடுத்து சோனு வாலியாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார் சோனு. 2 செக் மோசடிவழக்கில் ரூ. 1 லட்சம் கட்டி ஜாமீன் பெறலாம் என நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் அப்போது கையில் 50 ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே வைத்திருந்தார் சோனு. இதையடுத்து ஒரு வழக்கில் மட்டும் அப்பணத்தைக் கட்டிஜாமீன் பெற்றார். இன்னொரு ஜாமீன் பெற பணம் இல்லாவில் தவித்த அவர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறமுடியாமல் அவதிப்பட்டார்.

அதன் பின்னர் தனக்குத் தெரிந்தவர்களிடம் பேசி 20 ஆயிரம் ரூபாய் வரை திரட்டினார். அதற்கு மேல் பணம் தேறவில்லை. இதையடுத்துநீதிபதியிடம் இவ்வளவுதான் கிடைத்தது. மீதப் பணத்தை மார்ச் 6ம் தேதிக்குள் கட்டி விடுவதாக கோரினார்.

அதை ஏற்ற நீதிபதி, 6ம் தேதிக்குள் கண்டிப்பாக மிச்சப் பணத்தைக் கட்ட வேண்டும் என்று கூறி ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். அதன் பின்னரேசோனு நீதிமன்றத்தை விட்டு வெளியேற முடிந்தது.

சோனு வாலியா மீது ஏற்கனவே பலரும் பண மோசடிப் புகார்கள் கூறியுள்ளது நினைவிருக்கலாம். அவரது ஹேர் டிரஸ்ஸரான, ருக்ஷானாகூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் சோனுவுக்கு ரூ. 25 ஆயிரம் கடனாக கொடுத்தேன். ஆனால் இப்போதும் அந்தப் பணம் எனக்கு வரவில்லை.சோனுவைத் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்று புலம்பினார்.

பல படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான சோனு, ஜாமீன் தொகையைச் செலுத்தக் கூட முடியாமல் திண்டாடியது ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது.

Read more about: actress sonu walias trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil