மாமன் படத்தில் ராஜ்கிரண்.. நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட சூரி.. ரொம்ப எமோஷனல் ஆகிட்டாரே

சென்னை: சூரியின் நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் நாளை வெளியாகவிருக்கிறது. காமெடி ஆக்டர் என்ற நிலையிலிருந்து கதையின் நாயகன் என்ற நிலைக்கு வெற்றிமாறன்தான் சூரியை நகர்த்தினார். விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2, மாமன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் ராஜ்கிரண் குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார்.

சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வேலைகளை எல்லாம் செய்தவர் சூரி. பள்ளி படிப்பை தாண்டாத அவர் சென்னைக்கு வந்து தனது சினிமா கனவு நோக்கிய பயணத்தை தொடர்ந்தார். அந்தப் பயணத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்த அவர்; உணவுகூட உண்ணாமல் வெறும் தண்ணீரை குடித்து பசியை போக்கிய காலம் எல்லாம் உண்டு. அதேபோல் கலாபக் காதலன் திரைப்படத்தின் ஆடிஷனுக்காக சென்றபோது பசி மயக்கத்தில் அங்கேயே சுருண்டு விழுந்த கதையும் உண்டு.

அடையாளம் பெற்ற சூரி: பிறகு எலக்ட்ரீசியன் வேலை, செட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவிலேயே தன்னை தக்க வைத்துக்கொண்ட அவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதில் இடம்பெற்ற புரோட்டா காமெடி சீன் காரணமாக அவரை புரோட்டா சூரி என்றே பலரும் அழைத்தார்கள். அந்தப் படத்துக்கு பிறகு சூரிக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் படிப்படியாக முன்னேறினார்.

கதையின் நாயகன்: ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்த அவரை வெற்றிமாறன் விடுதலை படத்துக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் கதையின் நாயகனாக சூரி ஜொலித்தார். ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் வித்தியாசமான சூரியை பார்த்தார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்பினார். அந்தப் படத்துக்கு பிறகு கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவருக்கு கருடன் வணிக ரீதியாகவும், கொட்டுக்காளி விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. விடுதலை 2 கலவையான விமர்சனத்தை பெற்றது.

Soori Emotional Post About Actor And Director Raj Kiran

மாமன் சூரி: சூழல் இப்படி இருக்க கடைசியாக அவரது நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதையை சூரியே எழுதியிருந்தார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். சூரியுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், விஜி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகியிருந்த அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி பிற்போக்குத்தனமான, கிரிஞ்ச் தனமான கதை என்ற விமர்சனத்தையும் பெற்றது.

சூரி நெகிழ்ச்சி: நடிகர்களை பொறுத்தவரை அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தார்கள். ராஜ்கிரண் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கேரக்டரில் வாழ்ந்திருந்தார். இந்நிலையில் அவர் குறித்து சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். மாமன் படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது.

திரையில் பெருக செய்தது: 'சிங்கம்' என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை - அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார். அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக விஜி மேடம் அவர்களுடன் பகிர்ந்த அழகான கேமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது. இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள ரஜ்கிரண் சார் அவர்களுடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிய்ந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசீர்வாதம். தன்னம்பிக்கையும், எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாலைப்போல் இருக்கும். நன்றியுடன்... நெஞ்சார்ந்த நன்றியோடு... இந்த பயணத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Read more about: soori maaman raj kiran சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X