ஒரே பிகினில எத்தனை போட்டோ போடுவீங்க? பியூட்டி ஆன் டியூட்டியை ரைம்ஸாக கலாய்க்கும் ரசிகர்கள்

By

Recommended Video

படு கிளாமராக ஃபிட்னஸ் டிப்ஸ் குடுக்கும் சோஃபி சவுத்ரி - வீடியோ

மும்பை: ஒரே கலர் பிகினி புகைப்படத்தை அடிக்கடி வெளியிடும் நடிகையை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர்.

இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் அறிமுகமானவர் ஷோபி சவுத்ரி. தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

அழகான கேப்ஷன்

அழகான கேப்ஷன்

தற்போது வாய்ப்பில்லாமல் இருக்கும் ஷோபி, அடிக்கடி ஹாட்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த கிளாமர் புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்குவார்கள். இந்நிலையில், இப்போது புதிய ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் அழகான கேப்ஷன் கொடுக்கும் ஷோபி இதற்கும் கொடுத்துள்ளார்.

பியூர் கோல்ட்

பியூர் கோல்ட்

கடல் தண்ணீரில் டூபீஸ் உடையில் நிற்கும் ஷோபி, தலைமுடியை பிடித்தபடி ஏக்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இந்தப் போட்டோவுக்கு, 'பியூர் கோல்ட், இந்த ஒளி, இந்த பிகினி, இந்த பெண்' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷோபி. இதற்கு நடிகை மலைகா அரோரா, 'நல்லது' என்று கமென்ட் போட்டுள்ளார்.

டியூட்டியில் பியூட்டி

டியூட்டியில் பியூட்டி

அந்த புகைப்படத்தைப் பார்த்து, 'உண்மையிலேயே நீங்க தங்கம்தாங்க' என்று பல ரசிகர்கள் உருகியுள்ளனர். தண்ணிக்குள்ள தங்கச் சிலை என்று ஒருவர் வர்ணித்துள்ளார். டியூட்டில் இருக்கிறது பியூட்டி என்று ஒரு ரைமிங்கில் ரசிகர் ஒருவர் கூற, அதைப் பின்பற்றி மற்றொருவர், 'பிகினியில் சிக்கினி (அழகி) என்றும் 'தண்ணிக்குள்ள இப்படி நின்னீங்கன்னா, கொதிக்கும்... தங்கம் உருகிடப் போகுது...' என்று மற்றொருவரும் கிண்டலடித்துள்ளனர்.

ஒரே பிகினியில்

ஒரே பிகினியில்

இன்னொரு ரசிகர், 'கடந்த ஒரு மாசமா, ஒரே பிகினியில எத்தனை போட்டோதான் போடுவீங்க? போதுங்க போரடிக்குது, புதுசா போடுங்கம்மா' என்று கலாய்த்துள்ளார். பெரும்பாலான ரசிகர்கள் அவரது அழகை ஏராளமாகவும் தாராளமாகவும் ரசித்து கமென்ட் போட்டுள்ளனர். ஷோபியின் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X