கண்ணாடி முன்னால உட்கார்ந்து, கையை வச்சு மறைச்சபடி.. வைரலாகும் பிரபல நடிகையின் அப்படி இப்படி போஸ்!
சென்னை: பிரபல நடிகை கண்ணாடி முன் அமர்ந்து கைகளால் உடலை மறைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
உயிர்கொள்ளி வைரஸான கொரோனாவால், உலக நாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அடுத்த இடத்தில் பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சத்து 59,326 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,49,398ஆக உயர்ந்துள்ளது.

சினிமா படப்பிடிப்பு
இந்த வைரஸின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இல்லை என்பதால் நடிகர், நடிகைகள் வீட்டில் அமர்ந்தபடி பொழுதை போக்கி வருகின்றனர்.

புகைப்படங்கள்
இந்நிலையில் சிலர் தங்களது, நடனம், சமையல், செல்லப் பிராணிகளுடன் கொஞ்சுவது உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சில நடிகைகள் தங்களது கிளாமர் போட்டோக்களை வெளியிடுகின்றனர். சிலர், த்ரோபேக் என்று பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இப்படி அடிக்கடி போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் இந்தி நடிகை ஷோபி சவுத்ரி.

லாக்டவுன் லைஃப்
அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோ வைரலாகி வருகிறது. சட்டையை கழற்றி விட்டபடி போஸ் கொடுத்திருக்கும் அவர், கைகளால் மறைந்தபடி கண்ணாடி பார்க்கிறார். இதற்கு உணர்கிறேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ள ஷோபி, லாக்டவுன் லைஃப், வீக்கெண்ட் ஃபீல்ஸ் என்று ஹேஷ்டேக் கொடுத்திருக்கிறார். இதை ஆயிரக்கணக்கான நெட்டிசன்ஸ் லைக் செய்துள்ளனர்.

கொஞ்சம் சிரிக்கலாம்ல
நூற்றுக் கணக்கானவர்கள் கமென்ட் அடித்துள்ளனர். ஸ்டன்னிங் என்று கூறியுள்ள ஒருவர், தில் பெச்சாரா படம் பார்த்தீங்களா? என்று கேட்டுள்ளார். இன்னொருவர் போட்டோ சரி, ஏன் சோகமாக இருக்கீங்க? கொஞ்சம் சிரிக்கலாம்ல என்று கேட்டுள்ளார். ஏன் நீங்க வெப்சீரிஸ்கள்ல நடிக்கிறதில்லை.. குறிப்பா நெட்பிளிக்ஸ்? என்று விசாரித்துள்ளார்.

கண்கள்தான் ஸ்பெஷல்
ரொம்ப இளமையா இருக்கீங்க, அடுத்து என்ன படத்துல நடிக்கிறீங்க? என்று கேட்டிருக்கிறார் ஒரு நெட்டிசன். மற்றொருவர், உங்களுக்கு கண்கள்தான் ஸ்பெஷல், அது நிறைய பேசுது என்று கூறியுள்ளார். பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இன்னும் அதிகமாக போட்டோ எடுக்கலையா? என்று கேட்டுள்ளார் ஒருவர். ஷோபியின் இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஷாலின் 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் ஷோபி. இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











