For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'ஒரு ஆயிரம் ரூபா கடன் கிடைக்குமா? 15-ம் தேதி தந்திடுவேன்.. பிரபல நடிகைக்கு ஷாக் கொடுத்த ரசிகர்!

  By
  |

  சென்னை: பிரபல ஒர்க் அவுட் நடிகையிடம் ரசிகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

  உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

  இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

  நெற்றியில் ராமர் உருவம்... இணையத்தை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!நெற்றியில் ராமர் உருவம்... இணையத்தை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!

  கொரோனா தொற்று

  கொரோனா தொற்று

  இருந்தும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.64 லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 40,699 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 64 ஆயிரத்து 537 ஆக இருக்கிறது.

  நடிகர், நடிகைகள்

  நடிகர், நடிகைகள்

  அதோடு, குணமடைகிறவர்கள் விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக, நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால் அவர்கள் வெளியே செல்வதில்லை. அவர்களின் ஒரே பொழுதுபோக்காக மாறி இருக்கிறது, சமூக வலைதளங்கள்.

  நடிகை ஷோபி சவுத்ரி

  நடிகை ஷோபி சவுத்ரி

  இன்ஸ்டாகிராமில் பல நடிகைகள் பொழுது கழிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் எப்போதும் பிசியாக இருக்கும் நடிகைகளில் நடிகை ஷோபி சவுத்ரியும் ஒருவர். அடிக்கடி தனது புகைப்படங்களை இதில் பதிவேற்றி வரும் ஷோபி, ஒர்க் அவுட் போட்டோ மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்வார். அவர் இப்போது டிவி பார்த்து ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  என்ன செய்கிறீர்கள்?

  என்ன செய்கிறீர்கள்?

  இதற்கு கேப்ஷனாக, 'உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை கவனித்துக் கொள்ளும் போது நீங்கள் சிறப்பானவராக இருக்கிறீர்கள். வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் யூடியூப் பார்த்து ஒர்க் அவுட் செய்வதற்கு எனது இஏர்டெக் டிவி உதவுகிறது. ஃபிட்டாக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர். அந்த டிவியின் அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று சிலர் கேட்டுள்ளனர்.

  கடன் கிடைக்குமா?

  கடன் கிடைக்குமா?

  ஒரு நெட்டிசன், ஒரு ஆயிரம் ரூபா கடனா கிடைக்குமா? ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ள திரும்பிக் கொடுத்திடுவேன்' என்று கேட்டு, நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை ஷோபி வழக்கம் போல, இந்த ரசிகரின் கோரிக்கையையும் கண்டுகொள்ளவில்லை. இன்னொரு நெட்டிசன், நீங்க நல்லா ஒர்க் அவுட் பண்றீங்க, ஆனா நான் சோம்பேறி என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இவரின் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  விஷாலின் வெடி

  விஷாலின் வெடி

  நடிகை ஷோபி, இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். தமிழில் விஷால், சமீரா ரெட்டி நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

  English summary
  Sophie Choudry creates stir on cyberspace with her new workout pictures.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X