ஏன் இப்படி? இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை!

By

சென்னை: மாலத்தீவில் ஏற்கனவே பல நடிகைகள் குவிந்துள்ள நிலையில் மேலும் ஒரு நடிகை அங்கு சென்றுள்ளார்.

தினமும் போட்டோஸ் பதிவிடும் நடிகைகளில் ஒருவர், பிரபல இந்தி நடிகை ஷோபி சவுத்ரி.

விஷாலின் வெடி படத்தில் 'நான் பாம்பே பொண்ணு' என்ற பாடல் வருமே, அதற்கு ஆடியிருந்தவர் இவர்.

டேவிட் தாவன்

டேவிட் தாவன்

படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் இந்தப் பாடல் ஹிட். பிறகு இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் ஷோபி. பாடகியாகவும் இருக்கிறார். நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் டேவிட் தாவன் இயக்கிய காமெடி படமான, 'ஷாதி நம்பர் 1' மூலம் சினிமாவில் அறிமுகமான ஷோபி சவுத்ரி, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

ஷூட் அவுட் வடலா

ஷூட் அவுட் வடலா

பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கில், மகேஷ்பாபு நடித்த நேனொக்கடைன் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சோசியல் மீடியாதான் உலகம் என்றாகி விட்டது, இப்போது.

உருண்டு புரண்டு

உருண்டு புரண்டு

கிராமங்களில் இருந்து, பெருநகரங்கள் வரை எல்லோரும் அதில்தான் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள். கொரோனா கால கடத்தில், இதைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. சில நடிகர், நடிகைகள் இதற்கு அடிக்ட்டாகவே ஆகிவிட்டார்கள்.

மாலத்தீவில் ஷோபி

மாலத்தீவில் ஷோபி

தினமும் இரண்டு மூன்று புகைப்படங்களை பதிவு செய்யாவிட்டால், அவர்களுக்கு தூக்கமே வராது. இன்ஸ்டாவை இஸ்டத்துக்கு பயன்படுத்தும் நடிகைகளில் ஒருவர் ஷோபி சவுத்ரி. அவரும் இப்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார். ஏற்கனவே கோலிவுட் நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடற்கரை அருகில்

கடற்கரை அருகில்

டாப்ஸி, காஜல், பிரணிதா, வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா என அங்கு பலர் விசிட் அடித்திருக்க, தன் பங்குக்கு ஷோபி சவுத்ரியும் அங்கு சென்றிருக்கிறார். இவரும் வழக்கம் போல, பீச் ரிசார்ட்டில் கடற்கரைக்கு அருகில் அறை எடுத்து, பிகினியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

ஆகாயம் ஆயிரம்

ஆகாயம் ஆயிரம்

இவர் அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்போது கையில் ஒயின் கிளாஸுடன் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதற்கு கேப்ஷனாக, ஆகாயம் ஆயிரம் வண்ணங்களை பேசும்போது.. என்று கூறியுள்ளார்.

பொறாமையா இருக்கு

பொறாமையா இருக்கு

இதற்கு பல நெட்டிசன்ஸ், 'உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு ஷோபி என்றும், இந்த டிரெஸ்ல மிரட்டுறீங்க, கையில் சரக்கா? ஒயினா என்று கேட்டுள்ளனர். ஆகாயம் பேசும் வண்ணங்களில் நீங்கள்தான் பிரகாசமா இருக்கீங்க என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X