இப்படி போட்டோ போடறது மூலமா, என்னதான் சொல்ல வர்றீங்க? பிரபல ஹீரோயினை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
மும்பை: நடிகை ஷோபி சவுத்ரியின் புதிய கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், இந்தி நடிகை ஷோபி சவுத்ரி.
இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

தாறுமாறு கருத்து
இவர், அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்குவார்கள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட புகைப்படங்கள், ஓவர் கிளாமராக இருந்தன. இதற்கு ரசிகர்கள் தாறுமாறாக, கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

வெளிச்சத்துக்கு வாருங்கள்
இப்போது புதிய ஸ்டில் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு போட்டோ பதிவிடும்போது சிறப்பான கேப்ஷன் கொடுக்கும் ஷோபி, இப்போதும் அருமையான கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அது, எப்போதும் வெளிச்சத்துக்கு வாருங்கள். அது உருவாக்கும் நிழலுக்கு பயப்படாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அழகா இருக்கீங்க!
இந்த போட்டோ வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இந்த போட்டோவுக்கும் ரசிகர்கள் சரமாரியாக கமெட்ன்களை அள்ளிக் குவித்துள்ளனர். சிலர், இன்ஸ்டா போட்டோக்கள்ல மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க? என்று கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், நாளுக்கு நாள் உங்களோடட கிளாமர் அதிகரிச்சுட்டே போகுது என்று தெரிவித்துள்ளனர்.

அதுக்கும் மேல
'உங்க கண்ணைப் பார்த்துதாங்க நாங்க பயப்படறோம்' என்று சிலர் கலாய்த்துள்ளனர். இப்படி ஹாட் போட்டோக்களை போடறதன் மூலமா என்ன சொல்ல வர்றீங்க? என்று சிலர் விளாசியுள்ளனர். இன்னும் சிலர் ஷோபியை கவிதையாக வர்ணித்துள்ளனர். ஒருவர், உங்களோட ஒவ்வொரு போட்டோவும் சிறப்பு. இது அதுக்கும் மேல என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











