'கண்கள் சந்திச்சா அது மாறுமாம்ல..' கில்லர் லுக்கில் பிரபல நடிகை.. ஃபேன்ஸ் ரியாக்ஷனை பாருங்க!
மும்பை: பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.
சோசியல் மீடியாதான் உலகம் என்றாகிவிட்டது இப்போது. சாதாரண கிராமங்களில் இருந்து, பெருநகரங்கள் வரை எல்லோரும் அதில்தான் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொரோனா காலத்தில், இதைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. சில நடிகர், நடிகைகள் இதற்கு கிட்டதட்ட அடிமையாகவே மாறிவிட்டார்கள்.

கிளாமர் போஸ்
ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமென்ட்களுக்குள் மொத்தமாக விழுந்து கிடக்கிற நடிகைகள், அதிக லைக்ஸ், கமென்ட் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது கிளாமர்! சில நடிகைகள் எனக்கென்ன என்பது போல கன்னாபின்னாவென கிளாமர் போஸ் கொடுப்பதை தொழிலாகவே வைத்து விட்டார்கள்.

விதவிதமாக போஸ்
பிகினி, குட்டைப் பாவாடை, முன்னழகு தெரியும்படியான உடை என விதவிதமாக போஸ் கொடுக்கும் நடிகைகளில், இந்தி நடிகை ஷோபி சவுத்ரியும் ஒருவர். அவர் பதிவிடும் ஒவ்வொரு போட்டோவுக்கும் குவிகிறது ஆயிரக்கணக்கான லைக்ஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பிகினி போட்டோ, சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் இப்போது செம கிளாமராக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலாடை கழன்று
இன்னும் கொஞ்சம் குனிந்தால், மேலாடை கழன்று விழுந்துவிடுவது போல இருக்கிறது. இதற்கு கேப்ஷனாக, விழிகள் சந்திக்கும்போது, உலகம் மாறுகின்றன என்று கூறியுள்ளார். கேப்ஷனை பலர் பாராட்டியுள்ளனர். போட்டோவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். அவர் அழகை, அக்கு அக்காக வர்ணித்து நெட்டிசன்கள் பலர் கமென்ட் போட்டுள்ளனர். சிலர் அவர் இப்படி டிரெஸ் அணிந்திருப்பதைத் திட்டியுள்ளனர்.

கண்களை பாருங்களேன்
இந்த போட்டோக்களுக்கு இந்தி நடிகை கீர்த்தி கர்பண்டா, ஏன் ஹாட்னஸ் என்று கேட்டுள்ளார். ஒரு மாற்றமும் இல்லை, அதே கில்லர் லுக் என்று சிலர் கூறியுள்ளனர். ஒருவர், முதல்ல என் கண்களை பாருங்களேன், ஏதாவது இடம் மாறுதான்னு பார்க்கலாம் என்று கூறியுள்ளார். ஒரு ரசிகர், உங்களுக்கு என்ன வயசாச்சு? என்று விசாரித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சி
இவர், தமிழில் விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











