பாய் பிரண்டுக்கு விபத்து... தாத்தா மரணம்.. நமீதாவை அடுத்தடுத்து தாக்கிய சோகம்!
சென்னை: பாய் பிரண்டுக்கு விபத்து, தாத்தா மரணம் என அடுத்தடுத்து தாக்கிய சோகங்களால், சொந்த ஊரான சூரத்துக்குக் கிளம்பிப் போயிருக்கிறார் நடிகை நமீதா.
மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வரவேண்டும் என்ற முனைப்பில் தீவிர உடற்பயிற்சியில் இறங்கி, உடம்பைக் குறைத்து வந்தார் நமீதா.
கடை திறப்பு போன்ற கமர்ஷியல் நிகழ்ச்சிகளில் கூட அவ்வளவாகக் கலந்து கொள்ளாமலிருந்த அவருக்கு சமீபத்தில் அடுத்தடுத்து சோகங்கள் தாக்கின.
நமீதாவின் நெருங்கிய நண்பரும் பிஸினஸ் பார்ட்னருமான கபூர் மும்பை விபத்தில் பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட நாற்பது தையல்கள் போடப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நேரத்தில் நமீதாவின் அன்புக்குரிய தாத்தா வசந்த் நேற்று சூரத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. நமீதாவிடம் ரொம்பப் பாசமாக இருப்பாராம் இந்த தாத்தா.
ஏற்கெனவே வருத்தத்திலிருந்தவரை, இந்த சோகம் பெரிதாகத் தாக்க, சூரத்துக்குப் பறந்திருக்கிறார் நமீதா.


Click it and Unblock the Notifications












