பிரபல நடிகரின் மகனுடன் இரவில் ஊர் சுற்றும் யாஷிகா ஆனந்த்.. டென்ஷனில் குடும்பம்.. இதான் இப்போ ஹாட்!
சென்னை: இளம் நடிகருடன் நடிகை யாஷிகா ஆனந்த் இரவில் ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து நோட்டா, கழுகு 2, ஸாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மகத்துடன் காதல்
இருப்பினும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான மகத்தை காதலித்தார். ஏற்கனவே காதலி இருந்த நிலையில் மகத்தை அவர் காதலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆண் நண்பர் லிப்லாக்
இதற்காக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார் என்றால், வெளியில் வந்த பிறகும் சோஷியல் மீடியா லைவில் ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு லிப்லாக் கொடுத்தார்.

கிளாமர் போட்டோஸ்
அது அப்படியே லைவில் டெலிகாஸ்ட் ஆக, யாஷிகாவின் மானம் போனது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நடிகர் மகனுடன் நெருக்கம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் அவர் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் என்று தகவல் பரவியது.

இரவில் ஊர் சுற்றுகிறார்கள்
ஆனால் நடிகர் தம்பி ராமையா அதனை மறுத்தார். படத்தின் பாடல் காட்சிக்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை என்று கூறிய அவர், தன் விருப்பப்படிதான் தனது மகளுக்கு திருமணம் நடக்கும் என்றார். இந்நிலையில் யாஷிகா ஆனந்தும் உமாபதியும் இரவில் ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படி முடிவு கட்டுவது?
இருவரும் இரவு நேரத்தில் சுற்றுவதால் நடிகர் தம்பி ராமையா கவலை அடைந்துள்ளாராம். இருவரும் நண்பர்கள் என்று நினைத்த நிலையில் வேறு மாதிரி செல்கிறதே, இதற்கு எப்படி முடிவு கட்டுவது என குடும்பத்தினரிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய் மாமா கேரக்டர்
பல படங்களை இயக்கியுள்ள தம்பி ராமையா தற்போது குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகவும் வலம் வருகிறார். குறிப்பாக ஹீரோக்களுக்களுக்கு தாய் மாமன் கதாப்பாத்திரத்திலும் பட்டைய கிளப்பி வருகிறார்.

யாஷிகாவுடன்..
அவரது மகனான உமாபதி ராமையா அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மணியார் குடும்பம் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கெஸ்ட் அப்பீயரன்ஸ் கொடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











