வெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கப்போகும் ஆண்ட்ரியா.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்ததை தொடர்ந்து அவரை வெப் சீரிஸில் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வட சென்னை படம் ரிலீஸானது.

தவறான உறவு
இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்த ஆண்ட்ரியா, திருமணமான ஒரு நடிகருடன் கொண்ட தவறான தொடர்பால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாக தெரிவித்தார்.

மாஸ்டர்..
அவரது இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா விஜயுடன் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. தொடர்ந்து வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நிர்வாணமாக நடிக்க தயார்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்று கூறினார். இதனைக் கேட்ட ஓடிடி நிறுவனம் ஒன்று ஆண்ட்ரியாவை வெப் சீரிஸில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்புக்கொண்டு ஒப்பந்தம்
அந்த மாதிரி காட்சியில் நடிக்க அதிக சம்பளம் கேட்டாராம் நடிகை ஆண்ட்ரியா. அவர் அந்த மாதிரி நடித்தால் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணிய அந்த நிறுவனம் கேட்ட சம்பளத்தை தர ஒப்புக்கொண்டு அவரை ஒப்பந்தம் செய்துவிட்டதாம்.

டாப்லெஸாக..
வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை என்பதால், ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்கும் காட்சி அப்படியே காட்டப்படும் என இப்போதே எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே வட சென்னை படத்தில் அமீருடன் நெருக்கமான காட்சி ஒன்றில் டாப்லெஸாக நடித்தார் ஆண்ட்ரியா.

படுக்கையறை காட்சி
அதோடு நடிகர் சித்தார்த்துடன் அவள் என்ற படத்தில் படுக்கையறை காட்சியில் தில்லாக நடித்து பரபரப்பை கிளப்பினார் ஆண்ட்ரியா. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா வெப் சீரிஸிலும் நிர்வாணமாக நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











