நாமும் பாலிவுட் போனால் என்ன: சிந்தனையில் தென்னிந்திய நடிகைகள்

By Siva

சென்னை: நடிகைகள் அசின், இலியானா, காஜல் அகர்வால் போன்று நாமும் பாலிவுட்டுக்கு போனால் என்று தென்னிந்திய நடிகைகள் பலமான சிந்தனையில் உள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது.

அசின், காஜல் அகர்வால், இலியானாவைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகளில் பலருக்கு பாலிவுட்டுக்கு போகும் ஆசை வந்துள்ளது.

முருகதாஸ் கையைப் பிடித்து பாலிவுட்டுக்கு போன அசின்

முருகதாஸ் கையைப் பிடித்து பாலிவுட்டுக்கு போன அசின்

முருகதாஸ் தமிழில் சூர்யாவை வைத்து எடுத்த கஜினியை இந்தியில் ஆமீர் கானை வைத்து ரீமேக் செய்தார். தமிழில் ஹீரோயினாக நடித்த அசினையே இந்தியிலும் நடிக்க வைத்தார். இதனால் கஜினி மூலம் பாலிவுட் போன அசின் அங்கேயே கம் போட்ட மாதிரி உட்கார்ந்து கொண்டார்.

சிங்கம் ஜோடியான காஜல் அகர்வால்

சிங்கம் ஜோடியான காஜல் அகர்வால்

சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் இந்தியில் ரீமேக்கானது. அங்கு அஜய் தேவ்கன் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அனுஷ்கா ரோலில் காஜல் அகர்வால் நடித்தார். இந்த படம் என்னவோ ஹிட் தான். ஆனால் காஜல் தான் பாவம்.

ப்ரியதர்ஷனோடு பாலிவுட் சென்ற த்ரிஷா

ப்ரியதர்ஷனோடு பாலிவுட் சென்ற த்ரிஷா

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த கட்டா மீட்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் த்ரிஷா. படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதையடுத்து த்ரிஷா மூட்டையைக் கட்டிக் கொண்டு நம்ம ஊருக்கே வந்துவிட்டார்.

பாலிவுட்டில் இலியானா

பாலிவுட்டில் இலியானா

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானா பர்ஃபி படம் மூலம் பாலிவுட் சென்றார். அந்த படத்தில் இலியானாவின் நடிப்பைப் பார்த்து அமிதாப் பச்சனே பாராட்டினார் என்றால் பார்த்துக்கோங்க.

நாமும் போனால் என்ன?

நாமும் போனால் என்ன?

அசின், காஜல், த்ரிஷா, இலியானாவைப் பார்த்து நம் தென்னிந்திய நடிகைகளுக்கு பாலிவுட்டு்ககு போய் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதனால் பாலிவுட் போகலாமா, வேண்டாமா என்று அவர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X