எவ்ளோ தளபதி படம் பார்த்துருக்கோம்.. பாவம்ப்பா ஸ்ரீலீலா.. பராசக்தி புரொமோஷனில் தொடர்ந்து பல்பு!
சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் படத்திலும் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ஐட்டம் பாடலிலும் நடனமாடிய ஸ்ரீலீலா பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கேரளா, திருச்சி என படக்குழுவினர் பராசக்தி படத்தை தொடர்ந்து புரொமோட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆர்ட்ஸ் கல்லூரியில் பேசும் போது அசிங்கப்பட்ட ஸ்ரீலீலா தற்போது கேரளாவில் ரசிகர்களுடன் பேசும் போதும் மொக்கை வாங்கியுள்ள வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
எங்களுக்கு டப் பண்ண வேண்டாம்: கேரளாவில் பராசக்தி படத்தின் புரொமோஷனை பராசக்தி படக்குழு மேற்கொண்ட நிலையில், அழகாக சேலை கட்டிக் கொண்டு வந்த ஸ்ரீலீலா அங்கே இருந்தவர்களை பார்த்து உங்களுக்கு எல்லாம் தமிழ் தெரியுமா? எனக் கேட்டுள்ளார். உடனடியாக அங்கே இருந்த மலையாள நண்பர்கள் எங்களுக்கு நல்லாவே தமிழ் தெரியும். எங்களுக்கு டப் பண்ண வேண்டாம் என்றும் ஒரே அடியாக அடித்து விட்டனர்.
எவ்ளோ தளபதி படம் பார்த்துருக்க்கோம்: எங்களுக்கு டப் பண்ண வேண்டாம் என்று சொன்னதோடு மட்டும் நிறுத்தாமல் எவ்ளோ தளபதி படம் பார்த்துருப்போம் என விஜய்யின் ஸ்லீப்பர் செல்கள் ஸ்ரீலீலாவை மொக்கைப் பண்ண, ஓ சூப்பர்ப்பா என க்யூட்டாக ஸ்ரீலீலா பேசிய காட்சிகள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன.
எத்தனை டாக்டர்கள்: முன்னதாக ஆர்ட்ஸ் காலேஜில் நடைபெற்ற புரொமோஷனல் நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா பேசும் போது, இங்கே எத்தனை டாக்டர்கள் இருக்கீங்க என்று கேட்டதும், சிவகார்த்திகேயன் பின்னாடி இருந்து இது ஆர்ட்ஸ் காலேஜ்மா என பங்கம் பண்ண அவரை விளையாட்டாக அடிக்கவே போய்விட்டார் ஸ்ரீலீலா. அப்பாவி குழந்தையை ஏன்ப்பா தொடர்ந்து கலாய்க்கிறீங்க என ஸ்ரீலீலா ஆர்மியினர் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
அதர்வா வேற கலாய்ச்சிட்டாரு: இதுமட்டுமின்றி நடிகர் அதர்வா மேடை ஏறி பேசும் போது, ஸ்ரீலீலா செம டான்ஸர் என்பது இந்தியாவுக்கே தெரிந்திருக்கும். ஆனால், அதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரியும் என அதர்வா பாராட்ட, ரொம்பவே ஹேப்பியான ஸ்ரீலீலா நன்றி தெரிவிக்க, உடனடியாக, எப்படி ஸ்ரீ நீ சொன்னமாதிரியே பேசிட்டேனா என அதர்வா கவுன்ட்டர் கொடுத்து பங்கம் பண்ணிட்டார்.


Click it and Unblock the Notifications











