Maha Shivaratri 2026 : ஈஷா மையத்தில் பக்தியில் மெய் மறந்து டான்ஸ் ஆடிய ஸ்ரீலீலா!
சென்னை: மகா சிவராத்திரியை கொண்டாட கோவை ஈஷா மையத்திற்கு வந்த நடிகைகள் தமன்னா, ஸ்ரீநிதி ஷெட்டி, சாரா அர்ஜுன் ஆகியோர் நடனமாடிய வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நடிகை ஸ்ரீலீலா இதில் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
மகா சிவராத்திரி என்றால் சத்குருவின் ஈஷா யோகா மையத்திற்கு நடிகர் நடிகைகள் குவிவது வழக்கமாகி விட்டது அந்த வகையில், கரீனா கபூர் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரவீனா டாண்டன், சுனில் ஷெட்டி, பூமி பெட்னேகர், ரவீனா டாண்டன், சோனு சூட், நிம்ரத் கவுர் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தமன்னா, துரந்தர் பட நாயகி சாரா அர்ஜுன், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆகியோர் நடமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகை ஸ்ரீலீலா பக்தி பரவசத்தில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அவருடன் நடிகை கங்கனா ரணாவத் என பல நடிகைகளும் நடனமாடி உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

ஸ்ரீலீலா டான்ஸ்: ஈஷா மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் பேசிய, சத்குரு, இந்த உலகில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு தடைகளை சந்திப்பீர்கள். ஆனால் மிக முக்கியமான விஷயம், உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது.உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது உங்கள் கையில்தான் உள்ளது. உங்களை எப்படிச் செதுக்கிக் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றி. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் ஆதியோகி என்றார்.

தனுஷ் படத்தில்: தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலா சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில், ஸ்ரீலீலா ரத்தினமாலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தனுஷின் 55வது படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் ஸ்ரீலீலாவிற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications