மிருணாள் தாக்கூர் இடத்தை பிடித்த ஸ்ரீலீலா..D55 படத்தில் தனுஷின் ஜோடி.. நாம எதிர்பார்த்தது நடக்கல!

சென்னை: தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக DD55 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக தனுஷ் அதிரடியாக தனது எடையை அதிகரித்துள்ளார். இப்படத்தின் தனுஷூக்கு ஜோடியாக ஸ்ரீலீலா கமிட்டாகி உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேலானது. ஆனால், தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக இருந்ததால், இப்படம் குறித்த எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது தனுஷ் 54 படமான 'கர' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'போர் தொழில்' என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்திவி ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Dhanush D55 Sreeleela
Photo Credit:

தனுஷின் D55 பட அப்டேட்: இதையடுத்து, தனுஷின் D55 படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.'D55' திரைப்படம் அதிரடியான ஆக்ஷன் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதால், இந்த படத்திற்காக தனுஷ் வெயிட் போட்டிருப்பதாக அண்மையில் போட்டோவின் லுக்கை பார்க்கும்போது தெரிகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஸ்ரீலீலா தனுஷின் ஜோடி: இந்நிலையில், இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஸ்ரீலீலா கமிட்டாகி உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ரத்தினமாலா என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது படத்தில் தனுஷூக்கு ஜோடியாகி உள்ளார். தனுஷ், மிருணாளி தாகூர் திருமண வதந்திகள் சென்று கொண்டு இருக்கும் நிலையில், 'D55' படத்தின் ஹீரோயினாக அவர் தான் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதை பொய்யாக்கும் வகையில் இந்த படத்தில் ஸ்ரீ லீலா கமிட்டாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X