ஸ்ரீலீலாவின் மார்பில் கை வைத்து டான்ஸ் ஆடிய ஹீரோ?.. திடீரென நடந்த சென்சார்.. ரசிகர்கள் கேள்வி!
ஹைதராபாத்: ஸ்ரீலீலா நடித்த ஜூனியர் படத்தில் இடம்பெற்ற குத்துப்பாட்டில் ஹீரோ ஸ்ரீலீலாவின் மார்பை தொட்டு நடனமாடினார் என்றும் யூடியூபில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் சென்சார் செய்யப்பட்டு கை இடுப்புப் பக்கம் தொடுவது போல இருப்பதை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் என்ன பஞ்சாயத்து என கிண்டி வருகின்றனர்.
கிரீட்டி மற்றும் ஸ்ரீலீலா நடித்த "ஜூனியர்" திரைப்படம் ஜூலை 18 அன்று வெளியாகி, மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே சுமாரான வரவேற்பையே பெற்றது. படத்தின் கதை ஏமாற்றினாலும், கிரீட்டியின் ஆக்ஷன், நடனம், சண்டைக் காட்சிகள் பாராட்டப்பட்டன. எனினும், 'வைரல் வையாரி' என்ற துள்ளலான பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்பாடல், வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஸ்ரீலீலாவின் மின்னல் வேக நடன அசைவுகளும், வசீகரமான திரை இருப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன. கிரீட்டியுடன் அவரது கெமிஸ்ட்ரியும், துல்லியமான நடன அமைப்பும் பாடலின் கவர்ச்சியை அதிகரித்து, இளம் ரசிகர்களின் உடனடி விருப்பமான ஒன்றானது.
பராசக்தி ஸ்ரீலீலா: தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைக்க உள்ளார். பாலிவுட்டிலும் இப்போதே சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனாவை போலவே இவரும் அதிரடியாக பான் இந்தியா ஹீரோயினாக மாறிவிட்டார். புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸுக்கா பாடலில் கூட அதிக கவர்ச்சி காட்டாமல் ஆடிய இவர், தற்போது ஜூனியர் படத்தில் உச்சத்துக்கே சென்று விட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
யூடியூபில் சென்சார்: பாடலின் முழு வீடியோ யூடியூபில் வெளியானபோது, ரசிகர்கள் திரையரங்குப் பதிப்புடனுடன் ஒப்பிட்டனர். தியேட்டர் வெர்ஷனில் ஹீரோ ஸ்ரீலீலாவின் மார்பில் கை வைத்து நடனமாடினார் என்றும் யூடியூப் வெர்ஷனில் கை இடுப்புக்கு சென்றுவிட்டதாக நெட்டிசன்கள் இரண்டு வெர்ஷனையும் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். "இந்தத் துறையில் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை" என ஒரு ரசிகர் கருத்து தெரிவித்தார். ஸ்ரீலீலா நடனம் ஆடும் போது ஹீரோவின் கை அந்த இடத்தில் பட்டதால் சங்கடப்பட்டதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இந்த பரபரப்பை அதிகரித்துள்ளன.
விரைவில் ஓடிடி: "ஜூனியர்" விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ஓடிடியில் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் எந்த 'வைரல் வையாரி' பதிப்பு தளத்தில் இடம்பெறும் என ஆவலுடன் உள்ளனர். திரையரங்கின் போல்டான வெர்ஷனா அல்லது யூடியூபுக்காக திருத்தப்பட்ட வெர்ஷனா என்பதே கேள்வி. இது டிஜிட்டல் வெளியீட்டில் ரசிகர்கள் திரைப்படத்தை அணுகும் விதத்தையும் நிச்சயம் பாதிக்கும் என்கின்றனர். இதெல்லாம் சினிமாவில் சாதாரணம் என்றும் பல ஹீரோக்கள் நடிகைகளை கண்ட இடத்தில் தொட்டு நடித்துள்ளனர் என்றும் கட்டிப் புரண்டு உருளும் காட்சிகளும் ஹாலிவுட்டில் எல்லை மீறிய ஆபாசக் காட்சிகளும் சர்வ சாதாரணமாக படமாக்கப்பட்டு வருகின்றன என டோலிவுட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதீத சர்ப்ரைஸ் பாடலுக்கும் சென்சார்: முன்னதாக ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான ராபின்ஹுட் படத்தில் கெத்திகா ஷ்ர்மா பாவாடையை இழுத்து ஆட்டம் போட்ட அதீத சர்ப்ரைஸ் பாடலுக்கும் யூடியூபில் சென்சார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டோலிவுட் டான்ஸ் மாஸ்டர்கள் நடிகைகளை எந்தளவுக்கு கவர்ச்சியாக பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











