புஷ்பாவில் சமந்தா ஐட்டம் டான்ஸ்.. புஷ்பா 2வில் யாரு தெரியுமா?.. அதுவும் இத்தனை கோடி சம்பளமா?
ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், அனுசுயா பரத்வாஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி பான் இந்தியா ரிலீஸாக வெளியாகி தமிழ் மற்றும் இந்தியிலும் சக்கைப் போடு போட்டது. அதன் இரண்டாம் பாகத்தை மேலும், பிரம்மாண்டமாக சுகுமார் உருவாக்கி வருகிறார்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தை டார்கெட் செய்து புஷ்பா 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா பாடல் காட்டுத்தனமான கவர்ச்சி ஹிட் அடித்த நிலையில், புஷ்பா 2விலும் அதே மாதிரியான ஒரு பாடலை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், யாரு நடனமாட போகின்றனர் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது.

ஃபிளவரு இல்ல ஃபயரு: செம்மரக் கடத்தலில் ஈடுபடும் புஷ்பா எப்படி ஒரு பெரிய கேங்ஸ்டர் ஆகி டான் ஆகிறார் என்பதும் அவருக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ கிளாஷ் இரண்டாம் பாகத்தில் என்ன என்ன விளைவுகளை புஷ்பா வாழ்க்கையில் நடத்த காத்திருக்கிறது என்கிற கதையுடன் புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதன் அறிமுக வீடியோவிலேயே புஷ்பாவை பார்த்து புலியே நடுங்குவது போன்ற காட்சிகளை வைத்து ஓவர் ஹைப் கொடுத்துள்ளனர்.
ராஷ்மிகா தான் ஹீரோயின்: முதல் பாகத்தை போல 2ம் பாகத்திலும் ராஷ்மிகா தான் ஹீரோயின். ஆனால், படம் முழுக்க ஸ்ரீவல்லியாக ராஷ்மிகா வருவாரா? அல்லது ஓபனிங்கிலேயே வில்லன் ஆட்கள் ராஷ்மிகாவை போட்டுத் தள்ளி விடுவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சமந்தா ஐட்டம் டான்ஸ்: முதல் பாகத்தில் தெலுங்கில் ஊ அன்டாவா என்றும் தமிழில் ஓ சொல்றியா மாமா என்றும் சமந்தா போட்ட குத்தாட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்தது. இந்தியளவில் புஷ்பா திரைப்படம் ரசிகர்களை சென்றடைய அந்த பாடலும் ஒரு முக்கிய காரணம். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவை விட அந்த ஐட்டம் நம்பருக்கு ஆட சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 2ம் பாகத்திலும் சமந்தா ஆடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த முறை வேறு ஒரு முன்னணி டோலிவுட் நடிகை டான்ஸ் ஆடப் போகிறாராம்.
யாரு அந்த நடிகை: புஷ்பா 2வில் ஐட்டம் சாங்குக்கு ஸ்ரீலீலா தான் தெறி குத்தாட்டம் போட காத்திருக்கிறார் என்றும் சமீபத்தில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் உள்ளிட்ட படங்களில் அவர் ஆடும் நடனத்தை பார்க்க டோலிவுட் ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வருவதை பார்த்த புஷ்பா படக்குழு 2ம் பாகத்தில் ஸ்ரீலீலாவின் நடனத்தையே வைக்க முடிவு செய்து விட்டதாக கூறுகின்றனர்.
சம்பளம் எவ்வளவு?: நடிகை ஸ்ரீலீலா மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், ஒரே பாடலுக்கு புஷ்பா 2வில் நடனமாட அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் சமந்தா ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், உச்சக்கட்ட கவர்ச்சியில் ஸ்ரீலீலா டான்ஸ் ஆடப்போவதை காண டோலிவுட் ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











