Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. ஆனால்.. ஆசையை நைசா சொன்ன சீரியல் நடிகை !
சென்னை : சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி என கூறியுள்ளது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீநிதி
சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதைவிட, ஒரே ஒரு சீரியலில் நடித்து இல்லதரசிகளின் மனதில் இடம் பிடித்து விரைவில் புகழின் உச்சிக்கு பலர் சென்றுவிடுகின்றனர். அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீதொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

பொறுமை இல்லை
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்தனர்.

திருமணம் செய்துகொள்ளலாமே
தற்போது, ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்... நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்கள் இரண்டு பேரும் ஏன்? திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டு ஒரு பதிவினை போட்டு உள்ளார்.

உங்களுக்கு ஆள் இருக்கா ?
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி, நன்றாக தான் இருக்கும். ஆனால், எனக்கு இப்போ ஆள் இருக்கே என கூறியுள்ளார். சிம்புவை கல்யாணம் பண்ணிக்க இருக்கும் ஆசையை நைசா கூறியுள்ளார் ஸ்ரீநிதி. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் பெரிய நடிகர்கள் பற்றி பேசினால், பிரபலமாகிவிடலாம் என்பதால் ஸ்ரீநிதி இப்படி பேசி வருகிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். ஸ்ரீநிதியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
தாலி கட்டிய புகைப்படத்தை வெளியிட்டு.. உருக்கமான போஸ்ட் போட்ட நடிகை நிக்கி கல்ராணி.. ஒரே காதல் தான்!
-
பிரியங்கா சோப்ரா விபத்தில் சிக்கினாரா?.. ரத்த காயத்துடன் வெளியான போட்டோ.. பதறிய ரசிகர்கள்!
-
தனுஷுடன் படுக்கையறை காட்சிக்கு எத்தனை டேக்?.. ரசிகரின் விவகாரமான கேள்வி.. கூலாக பதிலளித்த மாளவிகா!