நடிகை நிகிஷா பட்டேலுடன் பழகினால்...!
சென்னை: சொற்ப படங்களில் மட்டுமே நடித்துள்ள நிகிஷா பட்டேலுடன் யாராவது பழகினால் அவர் உடனடியாக ஜெயிலுக்கு போய் விடுகிறார் என்று சிலர் வதந்தி கிளப்பி விட்டு வருவதால் பாவம் நிகிஷா பயந்து போய்க் கிடக்கிறாராம்.
கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதை என்பார்கள். அப்படித்தான் கோலிவுட்டில் ஏதாவது ஒரு சம்பவத்தில் யாராவது தொடர்பு கொண்டு விட்டால் உடனே ஊத்தி மூடி விடுவார்கள்.
அப்படிப்பட்ட நிலைக்கு தற்போது நடிகை நிகிஷா படேலையும் சேர்த்து விடுவார்கள் போல.

ஸ்ரீசாந்த்துடன் நிகிஷா
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார் நிகிஷா என்ற செய்தி பரவிய சில தினங்களிலேயே, சூதாட்ட வழக்கில் சிக்கினார் ஸ்ரீசாந்த்.

பாஸ் என்கிற பாஸ்கரனுடன்
நல்லவேளை நாம் அதில் சிக்கவில்லை என சந்தோஷமாக, 'தலைவன்' என்ற தமிழ் படத்தில் டிடிவி தினகரனின் தம்பி டிடிவி பாஸ்கரனுடன் ஜோடியாக நடிக்க கிளம்பினார் நிகிஷா.

சிறையில் பாஸ்கரன்
ஆனால், அதுவும் சோதனையாக, படம் முழுவதும் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், திரைக்கு வந்து தன் புகழை பரப்பும் என நிகிஷா ஆர்வமாக காத்திருந்த வேளையில் ஹீரோ பாஸ் என்கிற பாஸ்கரனும் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஒதுக்கிடுவாங்களோ...
நிகிஷாவுடன் தொடர்பு கொள்பவர்கள், அடுத்தடுத்து சிறைக்கு சென்றதால் சினிமா உலகம் தன்னை ராசி இல்லாதவள் என ஒதுக்கி விடுமோ என்ற அச்சத்தில் தவிக்கிறாராம் நிகிஷா பட்டேல்.


Click it and Unblock the Notifications











