விஜய் - சிம்பு தேவன் படத்தில் ஸ்ரீதேவி
விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.
திருமணமாகி, இரு மகள்களைப் பெற்று, அவர்களும் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார் ஸ்ரீதேவி.

இங்கிலீஷ் விங்கிலீஷ்
கடந்த ஆண்டு அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் வெளியாகி, வசூல் ரீதியாகவும் பரவாயில்லை என பேசப்பட்டது.
அந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் அஜீத் நடித்திருந்தார். அப்போது நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்தார். ஆனால் இப்போது நல்ல வேடங்கள் என்றால் ஓகே எனக் கூறி வருகிறார்.

பாரதிராஜா ஜோடி
இந்தி தவிர புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ரீதேவி. ஏற்கெனவே ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி.

சிம்பு தேவன் படம்
அடுத்து அவர் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதில் அவருக்கு என்ன மாதிரியான வேடம் என்ற விவரம் வெளியாகவில்லை.

கமலுக்கு நோ
இதற்கு முன் கமல் படத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் கேட்டபோது அவர் ஏதோ காரணங்களுக்காக மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.


Click it and Unblock the Notifications











