வசனம் பேச கஷ்டப்பட்ட ஹன்சிகா: உதவிக்கு வந்த 'சீனியர்' ஸ்ரீதேவி

By Mayura Akilan

புலி படத்தில் வசனத்தை மனப்பாடம் செய்ய இரண்டு மணிநேரம் கஷ்டப்பட்ட ஹன்சிகாவிற்கு சீனியர் நடிகை ஸ்ரீதேவி உதவி செய்து எளிதில் புரிய வைத்து பேச வைத்தாராம்.

விஜய்யுடன் புலி படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்தப்படத்தில் மன்னர் காலத்திய கதையில் ஸ்ரீதேவியின் மகளாக, இளவரசியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு இந்த படத்தில் ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம்.

குட்டி குட்டி டயலாக்

குட்டி குட்டி டயலாக்

அழகு ஹன்சிகாவை கஷ்டப்படுத்தக்கூடாதே என்று இதுவரை நடித்த படங்களில் சின்னச் சின்ன வரிகளில் மட்டுமே வசனம் பேசி நடித்துள்ளார் ஹன்சிகா.

அரைப்பக்க வசனம்

அரைப்பக்க வசனம்

புலி இயக்குனர் சிம்புதேவன், அரைப்பக்கம் தமிழில் வசனத்தை எழுதி கொடுத்துவிட்டு, அதை மனப்பாடம் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டாராம்.

2 மணிநேர டென்சன்

2 மணிநேர டென்சன்

பரிட்சைக்குப் படிக்கும் பள்ளி மாணவி போல, இரண்டு மணி நேரம் டென்ஷனோடு உட்கார்ந்து மனப்பாடம் செய்தாராம் ஹன்சிகா.

உதவிய ஸ்ரீதேவி

உதவிய ஸ்ரீதேவி

ஹன்சிகாவின் அம்மாவாக நடிக்கும் ஸ்ரீதேவி டயலாக்கை எளிதில் எப்படி பேசுவது என்று புரியவைத்தாராம். ஹன்சிகாவும் அதன்படி அரைப்பக்க வசனத்தையும் முழு எக்ஸ்பிரஷனோடு பேசி நடித்தாராம்.

பாராட்டிய படக்குழு

பாராட்டிய படக்குழு

புலி படத்தில் தன்னுடைய பெர்மான்ஸையும், டயலாக் பேசியதையும் பார்த்து பார்த்து இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டனராம்.

ஸ்ரீதேவியின் ரசிகை

ஸ்ரீதேவியின் ரசிகை

அரண்மனை' படத்திற்கு பின்னர் தனக்கு நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்த படம் 'புலி' என்று கூறிய ஹன்சிகா, தனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த படம் மூன்றாம் பிறையின் இந்த ரீமேக் சத்மா' படம் என்று கூறினார்.

ஹனி ஹேப்பி அண்ணாச்சி

ஹனி ஹேப்பி அண்ணாச்சி

சிறு வயதில் ஸ்ரீதேவியின் நடிப்பை பலமுறை பார்த்து மகிழ்ந்த தனக்கு தற்போது அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகவும் சந்தோஷமடைவதாகவும் கூறியுள்ளார்.

இருக்காதா பின்னே

இருக்காதா பின்னே

80, 90களில் கோலிவுட், பாலிவுட் பட உலகை தனது நடிப்பால் அசரடித்தவர் ஆயிற்றே சும்மாவா பின்னே... இன்றைய பல நடிகைகளுக்கு நல்லா பயிற்சி கொடுப்பார் மயிலு என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X