வாய்ப்புகள் குவிகிறது, ஆனால் படிக்கவும் செய்யணுமே: ஸ்ரீதிவ்யா
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.
ஆந்திரக் கரையோரத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர் ஸ்ரீதிவ்யா. அவர் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.
ஊதா கலரு ரிப்பன் என்றாலே ஸ்ரீதிவ்யா நினைவு தான் பலருக்கு வருகிறது.

பென்சில்
ஸ்ரீதிவ்யா அடுத்ததாக ஜீ.வி. பிரகாஷுடன் பென்சில் படத்தில் ஜோடி சேர்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை அடுத்து பென்சில் படத்திலும் ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.

வீர தீர சூரன்
பென்சிலை அடுத்து சுசீந்திரனின் வீர தீர சூரன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் அவருக்கு கல்லூரி மாணவி கதாபாத்திரமாம்.

பட வாய்ப்புகள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அடுத்து ஸ்ரீதிவ்யா கையில் 4 தமிழ் படங்கள் உள்ளன. இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

படிக்கவும் வேண்டுமே
வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் நிறைய படங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லையாம். ஆனால் நல்ல கதை, நல்ல இயக்குனர் மற்றும் பெரிய ஹீரோவின் படம் என்றால் நிச்சயம் அதில் நடிப்பேன் என்கிறார் ஸ்ரீதிவ்யா.


Click it and Unblock the Notifications











