என்ன இவர் இப்படி ஆகிவிட்டார்.. புதிய லுக்கால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. கலக்கும் சி.கா நடிகை!
சென்னை: நடிகை ஸ்ரீதிவ்யாவின் புதிய லுக் இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி திடீர் என்று கோலிவுட் முழுக்க பெரிய அளவில் ஹிட் அடித்தார். வரிசையாக அவர் நடித்த படங்கள் வெளியாகி வெற்றிபெற்றது.
முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா ஆகிய படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் எடுத்துக் கொடுத்தது. அதேபோல் காக்கிசட்டை படத்தில் அவர் போட்ட கெட்ட ஆட்டம் மாஸ் வைரல் ஆனது.

ஆனால் இல்லை
ஆனால் போக போக இவருக்கு மார்க்கெட் குறைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வரவேற்பை பெற்ற படம் என்றால் அது மாவீரன் கிட்டு மட்டும்தான். மருது போன்ற இவரின் படங்கள் சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வரவில்லை
அதற்கு பின் இவருக்கு சரியாக படம் வாய்ப்பும் வரவில்லை. குறைவான படங்களில் நடித்து இருந்தாலும் ஸ்ரீதிவ்யாவிற்கு தனியாக ரசிகர் பட்டாளம் இப்போதும் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இருந்து என்ன புண்ணியம், இன்னும் அவருக்கு பிரேக் கொடுக்க கூடிய அளவிற்கு பெரிதாக படம் எதுவுமே வரவில்லை.

என்ன வாய்ப்பு
இந்த நிலையில்தான் சிவகார்த்திகேயன் உடன் மூன்றாவது படம் நடிப்பதற்காக ஸ்ரீதிவ்யா பேசி வருகிறார். ஸ்ரீதிவ்யா- சிவா இணைந்து நடித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாஸ் ஹிட் அடித்தது. அதேபோல் காக்கி சட்டை நல்ல வசூல் வாங்கியது.

மூன்றாவது படம்
இந்த நிலையில்தான் இவர்கள் கூட்டணி மூன்றாவதாக இணைவதற்கு பேச்சுகள் நடந்து வருகிறது. இதற்காக தற்போது உடல் எடையை குறைக்கும் பணியில் இறங்கி உள்ளார் ஸ்ரீதிவ்யா. ஸ்ரீதிவ்யா கடந்த சில மாதங்களாக அதிக எடை போட்டு மிகவும் பருமனாக இருந்தார்.

நழுவியது
இவரின் உடல் எடையால், இவருக்கு வந்த வாய்ப்புகளும் தொடர்ந்து குறைந்தது. இதனால் அதிரடியாக உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இறங்கி தற்போது நியூ லுக்கில் கலக்கி வருகிறார் ஸ்ரீதிவ்யா. ஆம், ஸ்ரீதிவ்யாவின் நியூ பிட் லுக் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
செம
நன்றாக உடல் எடை குறைந்து, நல்ல பிட்னஸாக இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். பலரும் அவரின் புகைப்படத்திற்கு செம, சூப்பர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











