பெண்களை சப்ளை செய்யச் சொல்கிறார்: ராம்கி மீது ஸ்ரீ ரெட்டி பரபர புகார்

By Siva

சென்னை: இயக்குனர் ராம்கி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதில் இருந்து தெலுங்கு திரையுலகினர் அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர்.

அதன் பிறகு அவர் சென்னைக்கு வந்து கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

பட்டியல்

பட்டியல்

தான் சென்னைக்கு வந்துவிட்டதால் ஸ்ரீ லீக்ஸ் பட்டியல் வெளியிடப்படாது என்று அர்த்தம் இல்லை என்று கூறினார் ஸ்ரீ ரெட்டி. அவர் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் வில்லங்க பார்ட்டிகளின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்து கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார்.

ராம்கி

ராம்கி

இயக்குனர் ராம்கியின் ஆபாச சாட்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. மேலும் அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, இந்த சாட்களை எஸ்.எம். என்பவர் எனக்கு அனுப்பி வைத்தார். தனது தேவைக்கு இளம் பெண்களை அனுப்பி வைக்குமாறு ராம்கி கேட்டிருக்கிறார். அவரின் லட்சணத்தை நீங்களே பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை

ஸ்ரீ ரெட்டிக்கு சென்னைக்கு வந்துவிட்டதால் இனி அவர் தொல்லை இருக்காது என்று நினைத்த தெலுங்கு திரையுலகினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீ லீக்ஸ் விவகாரம் பூதாகரமானதில் இருந்து தொலைக்காட்சி சேனல்களில் நடந்து வரும் பல விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஸ்ரீ ரெட்டியை விளாசி வருபவர் இந்த ராம்கி என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ஸ்ரீ ரெட்டி கூறி வரும் புகார்கள் ஆதாரமற்றவை என்று தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் பலர் கூறி வருகிறார்கள். ஸ்ரீ ரெட்டிக்கு மனநிலை சரியில்லை என்றும், பிறரை வம்பிழுப்பதே அவருக்கு வேலை என்றும் தெலுங்கு திரையுலகினர் கூறுகிறார்கள். சில பெண்கள் அமைப்புகள் மட்டுமே ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக உள்ளன. யார் எதிர்த்தாலும், அமைதியாகிவிட மாட்டேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X