நடிகர் சங்கத்தின் பெரும்புள்ளி மீது ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார்: யார் அவர்?
சென்னை: நடிகர் சங்கத்தில் இருக்கும் பெரிய பிரபலம் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
சென்னையில் செட்டிலாகி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி. மீ டூ இயக்கம் பரபரக்கும் இந்த நேரத்தில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது,

பாலியல் தொல்லை
நடிகர் சங்கத்தில் ஒரு பெரிய பிரபலம் உள்ளார். அவர் ஹீரோயின்கள் உள்பட துணை நடிகைகள் வரை பலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மீடியா முன்பு புத்திசாலித்தனமாக அவர் பேசுவதை இன்று தான் பார்த்தேன். மிஸ்டர். போலி நான் உங்களை சும்மாவிட மாட்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆதாரம்
எனக்கு உங்களின் அளவு மற்றும் நிம் கூட தெரியும். நான் மீடியா மற்றும் வழக்கறிஞர்களிடம் நிரூபிப்பேன். என்னிடம் பக்காவாக ஆதாரம் உள்ளது. உங்களால் என்ன செய்ய முடியும். சில பெண்களுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்ட பிறகு அவர்களுக்கு பணம் கொடுத்தீர்கள். நீங்கள் தமிழ் திரையுலகம், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை ஆட்சி செய்வதாக நினைக்கிறீர்களா?

பணம்
நீங்கள் தயாரிப்பாளர் சங்கம் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று சிலர் என்னை சந்தித்து தெரிவித்தனர். சீ சீ பாவம் டா. விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் இது எல்லாம் தெரிந்து அந்த பெண் உங்களை விட்டுச் சென்றுவிடுவார். மிரட்டல் விடுவதில் நீங்கள் தான் நம்பர் ஒன். கவுண்டவுன் துவங்கிவிட்டது...ஜெய் ஜெயலலிதாம்மா என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள்
இரண்டு சங்கங்கள், விரைவில் திருமணம் செய்ய கோரிக்கை ஆகிய இரண்டு விஷயங்களை வைத்து ஸ்ரீ ரெட்டி யாரை பற்றி பேசுகிறார் என்று நெட்டிசன்கள் யூகித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர் விளக்கம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











